வாழ்த்துங்களேன்...

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்த மான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

5.3.24 முதல் 18.3.24 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 4.3.24`திருப்பதி புண்ணியம் கிடைக்கும்!'

5.3.24 முதல் 18.3.24 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, சித்தமல்லி அருள்மிகு சுந்தர நாராயணப் பெருமாள் சந்நிதியில் சமர்ப்பிக்கப்படுகிறது.

பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன்கோவில்-மணல்மேடு சாலையில், பட்டவர்த்தி என்ற இடத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தமல்லி. கொள்ளிடம் நதி உத்தரவாகினியாகப் பாயும் தலம் இது. இதன் கரையில் அழகுறை அமைந்திருக்கிறது ஆலயம்.

இங்கே காஞ்சி வரதரைப் போல சங்கு-சக்கரம் தரித்தபடி நின்ற கோலத்தில், தேவியரோடு அருள்கிறார் சுந்தர நாராயணர். 1963-ம் ஆண்டு சித்தமல்லிக்கு விஜயம் செய்த மகாபெரியவர், `திருப்பதி பெருமாளுக்கு நிகரானவர் இந்தப் பெருமாள்’ என்று போற்றி வணங்கினாராம். ஆக, திருப்பதிப் புண்ணியம் தரும் தலம் இது.

இந்தப் பெருமாளிடம் வைக்கப்படும் பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அற்புதமான இந்த ஆலயத்தில்தான் வாசகர்களின் பிரார்த்த னைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.



from Vikatan Latest news https://ift.tt/E7sH4Ly

Post a Comment

0 Comments