செய்யாத குற்றத்துக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை; முதியவருக்கு 14 மில்லியன் டாலர் இழப்பீடு!

1983-ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் 18 வயது ராபர்ட் டுபோயிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையில், ராபர்ட் டுபோயிஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

க்ரைம் - கொலை

ஏறத்தாழ 37 ஆண்டுக்கால சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் 2020 செப்டம்பர் 14-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான ராபர்ட் டுபோயிஸ், அவரது வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர்கள், தடயவியல் நிபுணர்கள், பல் மருத்துவர் ஆகியோர்மீது வழக்குத் தொடர்ந்தார். 37 ஆண்டுகள் தண்டனை முடிந்த நிலையிலும், மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ராபர்ட்டின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கை விசாரிக்க, காவல்துறையினர், மருத்துவ குழுவினரை உள்ளடக்கி ஒரு விசாரணைக் குழுவையும் நீதிமன்றம் அமைத்து, விசாரணையைத் தொடங்கியது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் கன்னத்தில் பல் பதிந்த காயம் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, மருத்துவ பரிசோதனைக் குழு கன்னத்திலிருந்த அந்த காயத்தை அடையாளமாகக் கொண்டு,

கைது

ராபர்ட் உட்பட இன்னும் பல ஆண்களிடமிருந்து கடித்த பல் அச்சு பதிந்த மாதிரிகளைச் சேகரித்து டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தியது. அந்த சோதனையின் இறுதியில், "கொலை செய்யப்பட்ட பெண்ணின் கன்னத்தில் பதிந்திருந்த பல் காயங்கள் எந்த வகையிலும் தடயங்களுடன் ஒத்துப் போகவில்லை. 1983-ம் ஆண்டு மருத்துவத் துறையில் பாலியல் வன்கொடுமையை நிரூபிக்கும்படியான உயர்தர கருவியோ, டி.என்.ஏ மூலம் குற்றவாளிகளைக் கண்டறியும் வழிமுறையோ இல்லை என்பதால்,

ராபர்ட் தவறுதலாக, செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட அந்தப் பெண்ணின் மரணத்திற்கும், ராபர்ட் டுபோயிஸ்க்கும் எந்த வித தொடர்பும் இல்லை" எனத் தடயவியல், மருத்துவ சோதனைக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.

நீதிமன்றம் தீர்ப்பு

அதைத் தொடர்ந்து, நீதிமன்றம், ``செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு தன் வாழ்க்கையை, இளமையை இழந்த ராபர்ட் டுபோயிஸ்க்கு, இழப்பீடாகத் தம்பா மாநகர நிர்வாகம் $14 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 1,16,24,90,700.00) வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறது.



from Vikatan Latest news https://ift.tt/DTwZkSU

Post a Comment

0 Comments