``ராகுல் காந்தி வரவேண்டாமா..?” - அரசு நிகழ்ச்சியில் ஆதரவு கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்  நடைபெற்றது.  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர்  முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  கலந்து கொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அடசு விழாவில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் அனிதா ஆதாகிருஷ்ண

அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "மீனவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லையே என்ற பல்வேறு கருத்துகள் எங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றது. எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். அந்த வகையில் உங்களின் மீனவ சகோதரனாக நான் சொல்லுவது என்னவென்றால், டெல்லியில் உங்கள் குரல் ஒலிக்கின்ற வகையில் முதல்வரிடம் பேசி ராஜ்ய சபாவை வாங்கித்தருவேன் என உங்களுடைய சகோதரனாக சொல்லிக்கொள்கிறேன். மீனவர்கள் நலனை காக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.

ராமநாதபுரத்தில் மீனவர்கள் மாநாட்டை நடத்தி அவர்களின் பத்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த அரசு மீனவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே நாட்டின் நிலைகளை நம்முடைய பங்கு தந்தைகள் சற்று நினைத்துபார்க்க வேண்டும். என்ன நடந்தால் சரியாக வரும் என்பதை யோசனைசெய்து பார்க்கவேண்டும். உங்களுக்கு அரசியலில் பங்குபெறுகின்ற வகையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிப்பதகாக அந்த பதவியை பெற்றுத்தருவதற்கான பணிகளை, அதிலும் நீங்கள் தருகின்ற அந்த நபருக்கு பதவியை பெற்றுத்தருகின்ற பணியை நான் செய்துதருவேன் என்பதை மீன்வளத்துறை அமைச்சர் என்றவகையில் சொல்லிக்கொள்கிறேன்.

அமைச்ச அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளும், பாதிப்புகளும் எனக்கு நன்றாக தெரியும். இரண்டு நாள்களுக்கு முன்பு பங்குதந்தையர்கள் மீட்டிங் போட்டதாக சொன்னார்கள். எனவே வர இருக்கின்ற காலத்தில் எதையும் மனதில் வைக்காமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல், நம்மையெல்லாம்  பிரித்தாள நினைக்கின்றவர்களை ஒதுக்கிவிட்டு யார் வரவேண்டும், யார் மேலே இருக்கவேண்டும் என நினையுங்கள். ராகுல் காந்தி வரவேண்டாமா. இந்தியா கூட்டணி வெல்ல வேண்டாமா. எனவே உங்களையெல்லாம் கைகூப்பி கேட்கின்றேன், எங்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கின்றோம். நம் நாடாளுமன்ற உறுபினர் உங்களுக்காகவும் குரல் கொடுப்பார், உங்கள் பிரச்னைக்காகவும் குரல் கொடுப்பார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/loHtqIJ

Post a Comment

0 Comments