`பேத்தி வன்கொடுமை; முதியவருக்கு 111 ஆண்டுகள் சிறை தண்டனை’... 30 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும்! - ஏன்?

கேரளா மாநிலம், கோழிக்கோடு, மருதுன்கராவைச் சேர்ந்தவர் வெட்டோரம்மாள் அப்துல் நாசர். இவருக்கு நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயதில் ஒரு பேத்தி இருந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது சிறுமி தன் தாத்தாவைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அப்துல் நாசர் சிறுமியை வலுக்கட்டாயமாக்க வீட்டிற்குள் இழுத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

கைது

மேலும், நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சிறுமியை மிரட்டியிருக்கிறார். ஆனால், சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் நண்பனிடம் நடந்த கொடுமையைக் கூறியிருக்கிறார். அதன் பிறகே, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை வெட்டோரம்மாள் அப்துல் நாசரைக் கைது செய்தது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு டிசம்பர் 2022-ல், நாதா புரத்தில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நாதபுரம் விரைவு நீதிமன்ற நீதிபதி சுஹைப் எம், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வெட்டோரம்மாள் அப்துல் நாசருக்கு சிறை தண்டனையை அறிவித்tஹார். மொத்தமாக, 111 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2.1 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் குற்றவாளியான அப்துல் நாசருக்கு அனுபவிக்க வேண்டிய 111 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்பதால், அதிகபட்சமாக ஒரு பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 30 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து சிறை தண்டனையையும் அனுபவிப்பதால் 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.

.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/96zks4l

Post a Comment

0 Comments