``பொருளாதார ஞானியாக திகழ்ந்தவர் எடப்பாடியார்..!" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயில் மணிமண்டபத்தில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக்காக பலமுறை கோரிக்கை விடுத்தும் வழங்காமல் அநீதி இழைக்கப்பட்டது. தொடர்ந்து எடப்பாடியார் குரல் எழுப்பியதால் தற்பொழுது அந்த இருக்கை ஒதுக்கப்பட்டது. இதற்காக எடப்பாடியாருக்கு திருமங்கலம் தொகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இயக்கத்தில்தான் கடைக்கோடியில் கொடி பிடித்தவர்கூட கோட்டையில் அமரலாம்.

நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்

தேர்தல் தேதி அறிவிக்கும் வரை எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க ஜெயலலிதா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் அன்னதானங்கள், கண் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை பட்டிதொட்டியெங்கும் நடத்துவோம்.

பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம்தான் உள்ளது, நிதிக்கான எந்தத் திட்டமும் இல்லை, இது குறித்து எடப்பாடியார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். காவிரி பிரச்னையில் நமது உரிமை பறிபோவதை கண்டித்து வெளிநடப்பு செய்து தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் துரோங்களை பேட்டியின் வாயிலாக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியை சாதரணமாக எடை போட்டு விடாதீர்கள், அப்படி நினைத்தவர்கள் அவரிடம் தோற்று போய்விட்டார்கள். ஸ்டாலினுக்கு ஒன்றை கூறுகிறேன், எடப்பாடியார் 50 ஆண்டுகால பொதுவாழ்வில், கிளைச்செயலாளராக இருந்து இன்றைக்கு இந்த இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், மக்களுக்கும் வழிகாட்டும் தலைவராக உள்ளார். அவரின் ஆற்றல், வல்லமை குறித்து குறைவாக மதிப்பீடு செய்தால் தவறாகும்.

தமிழக மக்களுக்கு வழிகாட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மீண்டும் அமர்வது உறுதி, யாரும் குறைத்து மதிப்பீடு செய்து  தோற்றுப் போய்விடாதீர்கள்.

அன்னதானம்

எடப்பாடியாரை வெல்ல யாரும் கிடையாது. ஜெயலலிதாவின் ஆன்மா துணையோடு பல்வேறு வெற்றிகளை நிரூபித்து காட்டியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது ஆட்சி ஆட்டம் காணும் என்று பேசினார்கள். ஆனால் அம்மாவின் புனித அரசை முழு ஆயுளோடு காப்பாற்றி, மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து பொருளாதார ஞானியாக எடப்பாடியார் திகழ்ந்தார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மாபெரும் வெற்றியினை மக்கள் அளிப்பார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/VmEgWkf

Post a Comment

0 Comments