Tamil News Live Today: போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

சசிகலா ரஜினி சந்திப்பு..!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே.சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டிவந்தார். இந்த வீட்டுக்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. நேற்று ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, `ஜெயலலிதா இல்லம்’ எனப் பெயரிடப்பட்ட அந்த இல்லத்தில் விழா நடைபெற்றது.

இந்நிலையில் கிரக பிரவேசத்துக்கு வருகை தரமுடியாத சூழலில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் வருகை தந்தார்.

பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ``வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு அவர்களுக்கு பெயர், புகழ், சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ‘ஜெயலலிதாவின் இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்?’ என கேட்டதற்கு, “அரசியல் பேச விரும்பவில்லை” என முடித்துகொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/6ghDXeN

Post a Comment

0 Comments