தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய், நேரடியாக அரசியலில் இறங்கப்போவதாகத் தொடர்ச்சியாகப் பேச்சுகள் வந்துகொண்டே இருந்தன. அதிலும், கடந்த ஆண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை அளித்த பிறகு, கிட்டத்தட்ட அந்தச் செய்திகள் உறுதியாகின.
அதன் பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தில் தனித்தனியாக வழக்கறிஞர் பிரிவு, மகளிரணி என அடுத்தடுத்த வேலைகளை புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி, விஜய் தனது கட்சியின் பெயரை `தமிழக வெற்றி கழகம்' என வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நமது விகடன் வலைதளப்பக்கத்தில் "அரசியல் களத்தில் நடிகர் விஜய்..." என்ற கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில் `சாதிப்பார்', `சறுக்குவார்', `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம். இதில் கலந்துகொண்ட வாசகர்களில்,
அரசியல் களத்தில் நடிகர் விஜய் `சாதிப்பார்' என 23 சதவிகித வாசகர்களும், `சறுக்குவார்' என 35 சதவிகித வாசகர்களும், `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என 42 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
இதே கருத்துக்கணிப்பை நமது ஜூனியர் விகடனுடைய சமூக வலைதளப்பக்கமான ட்விட்டர் எக்ஸ் பக்கத்திலும் நடத்தினோம்.
அதில் 3,728 பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். அதனடிப்படையில், அரசியல் களத்தில் நடிகர் விஜய் `சாதிப்பார்' என 45.4 சதவிகித வாசகர்களும், `சறுக்குவார்' என 20.9 சதவிகித வாசகர்களும், `பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்' என 33.7 சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
from Vikatan Latest news https://ift.tt/0n7GDNR
0 Comments