டெல்லி இப்போது அதகளமாகிக் கொண்டிருக்கிறது. ஹலோ, இது பொலிடிக்கல் நியூஸ் இல்லை. காரணம், ஆட்டோமொபைல் எக்ஸ்போ நடந்து கொண்டிருக்கிறது டெல்லியில். இதன் பெயர் ‘பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ!’.
இதில் கார்/பைக் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களைக் காட்சிப்படுத்தினால், அது இந்த ஆண்டில் எப்போவாச்சும் ஒரு நாள் மார்க்கெட்டில் களமிறங்கும். அதற்கான முன்னோட்டம்தான் இது மாதிரியான ஆட்டோ எக்ஸ்போ.
இந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் யமஹாவும் ஒரு ஸ்டால் வைத்துத் தனது வாகனங்களை ஷோகேஸ் செய்துகொண்டிருக்கும் நிலையில், லேட்டஸ்ட்டாகப் பேசுபொருளாகி இருக்கிறது யமஹா. காரணம், அதன் ஃபஸினோ என்கிற அல்ட்ரா மாடர்ன் ஸ்கூட்டர். Fascino Fi Hybrid என்கிற பெயரில் அது காட்சிப்படுத்திய ஸ்கூட்டர், ஒரு ஹைபிரிட் ஸ்கூட்டர்.
இந்த ஷோவில் என்மேக்ஸ் மற்றும் கிராண்ட் ஃபிலானோ (NMax and Grand Filano) என்ற 2 ஸ்கூட்டர்களையும் காட்சிக்கு வைத்திருந்தது யமஹா. இந்த ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் மாடல். இவை நம் ஊருக்கு எப்போது வரும் என்று தெரியாத நிலையில், நம் ஊர் ஸ்கூட்டர்களைப் பற்றிப் பார்க்கலாம். இதில் ரே, ஏரோக்ஸ் போன்ற ஸ்கூட்டர்களைத் தாண்டி, ஃபஸினோ ஒரு முக்கியப் புள்ளியாகி இருப்பதற்குக் காரணம் – அது தரும் மைலேஜ் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம்.
அதாவது, இது ஒரே நேரத்தில் எலெக்ட்ரிக் மோட்டாரிலும் ஓடும்; பெட்ரோல் போட்டும் ஓட்டிக்கலாம்! (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்னா வீட்ல பவர் பாயின்ட்டில் சார்ஜ் ஏத்திப்புட்டு ஓட்டிக்கலாமானு கேட்குற அளவு எலெக்ட்ரிக் கிடையாது!) இன்ஜினை எஃபீசியன்ட் ஆகவும், ரன்னிங் காஸ்ட்டைக் குறைக்கவும் உதவுவதுதான் ஹைபிரிட். அட, இதில் வழக்கமான ஸ்கூட்டர்களைவிட எமிஷன் அளவும் குறையும் என்பதும் ஸ்பெஷல்.
ஏற்கெனவே இது ஹைபிரிட்டாகத்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாஞ்ச் ஆகியது. அதில் உள்ள Smart Motor Generator (SMG) எனும் சிஸ்டம்தான் இதன் முக்கியமான விஷயம். ஃபஸினோவைப் பயன்படுத்தியவர்களுக்குத் தெரியும் – இது எத்தனை ஸ்மூத் என்று! இப்படி வெச்சுக்கலாம் – இதை ஒரு ஸ்மார்ட் ஹைபிரிட் ஸ்கூட்டர் அல்லது மைல்டு ஹைபிரிட் என்று சொல்லலாம்.
இந்த ஃபஸினோ கொஞ்சம் அட்வான்ஸ்டு ஆக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், பெட்ரோல் ஸ்கூட்டராகவும் செயல்படலாம் என்பதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கான்செப்ட் ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களிடம் விசாரித்தால், அதிக மைலேஜ் சொல்கிறார்கள். ரியல் டைமில் இது சுமார் 60 கிமீ–க்கு மேல் மைலேஜ் தருகிறது என்பவர்களெல்லாம் இருக்கிறார்கள். (நீங்க வெச்சிருந்தீங்கன்னா சொல்லுங்க!) ஒரு 125 சிசி பவர்ஃபுல் ஸ்கூட்டருக்கு இது செம மைலேஜ்! இதற்குக் காரணம், இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம்தான்.
பெட்ரோல் இன்ஜினுடன் சேர்ந்து ஹைபிரிட் எலெக்ட்ரிக் மோட்டார் கனெக்ட் செய்திருக்கிறார்கள். சாதாரண ஸ்கூட்டர்களைவிட இது 16% மைலேஜ் எக்ஸ்ட்ரா தருவது இதனால்தான். பெட்ரோலில் மட்டும் ஓடினால் டார்க் 9.7Nmதான். இதுவே ஹைபிரிட் மோட்டாருடன் சேர்ந்தால், 10.3Nm டார்க் கிடைக்கும். இதனால் பிக்–அப்பும் செமையாக இருக்கும். இதன் பவர் மட்டும் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், புதிதாக வரும் ஸ்கூட்டரிலும் அதே 8.2bhpதான் இருக்கும். ஆனால், இந்த ஸ்கூட்டர் ஹைவேஸுக்குச் செமையாக இருக்கும். மைலேஜும் எக்ஸ்ட்ரா வரும்!
Smart Motor Generator மோட்டார் இருப்பதால், சிக்னலில் காத்திருக்கும்போது ஆஃப் ஆகும். ஆக்ஸிலரேட்டர் திருகினால் தானாக ஆன் ஆகிக் கிளம்பும். வசதிகளிலும் இது பட்டையைக் கிளப்பும். எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், யமஹாவின் புளூடூத் கனெக்டிவிட்டி, டிஸ்க் பிரேக் என ஏகப்பட்ட வசதிகளும் உண்டு.
ஒரு லட்ச ரூபாய்க்குள் செமயான மைலேஜ் ஸ்கூட்டர் வேணும்னா, யமஹா ஃபஸினோ செம சாய்ஸ்! இது எத்தனை மாற்றங்களுடன் வருதுனு தெரிஞ்சுக்க கொஞ்சம் காத்திருங்க!
from Vikatan Latest news https://ift.tt/5USlO8o
0 Comments