3 முன்னாள் முதல்வர்களை களமிறக்கிய பாஜக..! - 72 பேர் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 190 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் நேற்று மாலை இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பியூஸ் கோயல், அனுராக் சிங் தாக்குர் உட்பட 72 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். டெல்லியில் 2 தொகுதிக்கும், குஜராத்தில் 7 தொகுதிக்கும், ஹரியானாவில் 6 தொகுதிக்கும், ஹிமாச்சல பிரதேசத்தில் 2 தொகுதிக்கும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 20 தொகுதிக்கும், மத்திய பிரதேசத்தில் 5 தொகுதிக்கும், தெலங்கானாவில் 6 தொகுதிக்கும், உத்தரகாண்டில் 2 தொகுதிக்கும், திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லிக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் புதியவர்கள் ஆவர். கர்நாடகாவில் அறிவிக்கப்பட்ட 20 பேரில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா சிமோகா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்ட 20 வேட்பாளர்களில் 8 பேர் புதுமுகங்கள் ஆவர். மகாராஷ்டிராவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பியூஷ் கோயல் வடக்கு மும்பை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மறைந்த கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா முண்டே பீட் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இத்தொகுதியில் பங்கஜா முண்டேயின் சகோதரி பிரிதம் முண்டே எம்.பி.யாக இருந்தார். நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும், சுதிர் முங்கந்திவார் சந்திராப்பூர் தொகுதியிலும், ரேவார் தொகுதியில் ரக்‌ஷா கட்சேயும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க வின் முதல் வேட்பாளர் பட்டியலில் 34 அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தனர். மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க தொகுதி பங்கீட்டை உறுதி செய்தது. அதனை தொடர்ந்தே 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பங்கஜா முண்டே

பா.ஜ.க இதுவரை வெளியிட்டுள்ள 267 வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் புதுமுகங்கள் ஆவர். அதாவது, 21 சதவீதம் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதாவது 67 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 140 எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 370 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியலில் பா.ஜ.க திருத்தம் செய்துள்ளது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/mFIliNC

Post a Comment

0 Comments