``இனி திமுக-வை, `ட்ரக் மாஃபியா கழகம்’ என்றே அழைக்கலாம்!” - மத்திய அமைச்சர் முரளிதரன் விளாசல்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகத்தில் மொத்தம் உள்ள 35 அமைச்சர்களில் 11 பேர் மீது ஊழல் முறைகேடு புகார்கள் இருக்கின்றன.

விழா

அதில் ஒருவரான செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த எட்டு மாத காலமாக சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு தமிழக ஏழை - எளிய மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து இந்த அரசு சம்பளம் கொடுத்து வருகிறது. தமிழக மக்களை பாதித்து அழிவுப்பாதையில் தள்ளும் போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக் என்பவர் ஆளும் திமுக அரசாங்கத்துக்கும் தொடர்பிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்

கட்சியினர்..

குற்றச்செயலில் ஈடுபட்டு அதன் மூலம் ஜாபர் சாதிக் ஈட்டிய வருமானத்தை, ஆளும் அரசில் உள்ளவர்களுக்கு நிதியாக கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பதன் மூலம் ஆளும் தி.மு.க. அரசின் மற்றுமொரு உண்மையான முகம் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டு காலமும் தி.மு.க.வை திராவிட முன்னேற்ற கழகம் என்றுதான் அழைத்து வந்திருக்கின்றனர் ஆனால் இனி "ட்ரக் மாஃபியா கழகம்" என்று அழைக்கலாம்" என கடுமையாக விமர்சித்து பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/F86fKI9

Post a Comment

0 Comments