முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்து தலைமறைவு - பாஸ்போர்ட்டை முடக்க சிபிசிஐடி பரிந்துரை

பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தலைமறைவாகிவிட்டதால், அவரது பாஸ்போர்ட்டை முடக்கும்படி பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் - ராஜேஷ் தாஸ்

கடந்த 2021-ம் ஆண்டு பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. பின்னர், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இத்தகைய சூழலில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார், `கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நிலையில், தண்டனையை அனுபவிக்கும் வகையில் ராஜேஸ் தாஸை கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு மார்ச் 8-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது' எனக் கூறி பதில் மனு தாக்கல் செய்தார்.

cbcid சிபிசிஐடி

மேலும் அந்த பதில் மனுவில், நீதிமன்ற உத்தரவின்படி அவரைக் கைதுசெய்ய சென்றபோது வீட்டில் அவர் இல்லாததால் அவருக்கெதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது பாஸ்போர்ட்டை முடக்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்குப் பரிந்துரை கடிதம் எழுதப்பட்டடிருப்பதாகவும தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சிபிசிஐடி-யின் பதில் மனுவுக்கு பதிலளித்து வாதங்களை வைப்பதற்கு ராஜேஷ் தாஸ் சார்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/H5BJaYs

Post a Comment

0 Comments