நாடாளுமன்றத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; யார் யாருக்கு எந்த தொகுதி?

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் சிலவாரங்களே உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் முதல் கட்சியாக தொகுதி பங்கீட்டை முடிவு செய்து, முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகிவிட்டது. கூட்டணி இழுபறியில் இருந்த அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டன.

செல்வப்பெருந்தகை

ஆனால், தி.மு.க கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட காங்கிரஸ் மட்டுமே வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை, திருநெல்வேலிக்கு வேட்பாளர்கள்  அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறியுள்ளார்

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்

திருவள்ளூர்  -  சசிகாந்த் செந்தில்

கரூர் - ஜோதிமணி

விருதுநகர் -  மாணிக்கம் தாகூர்

சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்

கன்னியாகுமரி -  விஜய் வசந்த்

கடலூர் - விஷ்ணு பிரசாந்த்       

கிருஷ்ணகிரி - கோபிநாத்



from Vikatan Latest news https://ift.tt/7Lxk8JO

Post a Comment

0 Comments