அமெரிக்காவின் ஆம்ட்ராக் ஸ்டேஷனில் பெண்மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்தப் பெண்ணின் உடலின் கால் பகுதி மட்டும் காணாமல் போனது. இந்த நிலையில், கலிபோர்னியாவின் நடைபாதை ஒன்றில் 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் ரத்தம் படிந்த எதோ ஒன்றை வைத்திருப்பதை ஒருவர் பார்த்தார். அதை உடனே வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். அதில், கையில் ஒரு கால் பகுதியை வைத்துக்கொண்டிருக்கும் அந்த இளைஞர், அந்தக் காலை வீடியோ எடுப்பவர் முன்பு அசைத்துக்காட்டுவதும், அதை நுகர்ந்து பார்த்துக் கடித்துத் தின்பதும் பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. உடனே இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.
மேலும், அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், அந்த இளைஞர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது காவல்துறை. அந்த இளைஞர் ரெசெண்டோ டெல்லெஸ் (27) என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஆனால், ஏன் அந்தக் கால் பகுதியை மட்டும் எடுத்து சென்றார்? அதை சாப்பிடக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு காவல்துறை பதில் தேடி வருகிறது. அந்த வீடியோ எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
from Vikatan Latest news https://ift.tt/gdRKJhs
0 Comments