தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும், போடி தொகுதியில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வமும் வென்றனர். முதல் முறை தேர்தலில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் எம்.பி., ஆனதும் தேனி தொகுதியில்தான் என்பதால், நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக உள்ளது தேனி.
தேனி எம்.பி தொகுதியில் அதிக முறை அ.தி.மு.க வென்றிருந்த நிலையில், எம்.பி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யார் போட்டியிடுவது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர். எடப்பாடி, தான் சார்ந்த கவுண்டர் சமுகத்தைச் சேர்ந்த ஜக்கையனை தேனி மாவட்டச் செயலாளராக அறிவித்தார். இதை ஏற்காத முக்குலத்தோர் சமுதாயத்தினர், தேனியில் பனிப்போர் செய்து வருகின்றனர். அதன் காரணமாக எம்.பி தேர்தலிலும் போட்டியிட ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
இதற்கு தேனியில் டி.டி.வி, ஓ.பி.எஸ் ஒரே மேடை ஏறியதும் ஒரு காரணம். பழைமை மாறாத கிராமங்களைக் கொண்ட தேனியில், நிர்வாகிகள் மட்டுமே ஓ.பி.எஸ், இபி.எ.ஸ் எனப் பிரிந்துள்ளனர். அடிமட்ட கட்சியினர் யாரிடமும் பிரிவினை இல்லை. இதனால் டி.டி.வி போட்டியிட்டால், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெல்வது எளிதானது இல்லை எனக் கூறி, போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் இருந்தனர். பிற கட்சிகள் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மையமாக வைத்து வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளன. ஆனால் அ.தி.மு.க-வில் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், ``நாராயணசாமி 1982 முதல் அ.தி.மு.க-வில் இருப்பதாகக் கூறினாலும், கடந்த ஆண்டுதான் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பைப் பெற்றார். தற்போது தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். கடந்த 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களின்போது ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். கடந்த 2014, 2019 தேனி எம்.பி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டிருந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நாராயணசாமியை கட்சி நிர்வாகிகளுக்குக்கூட தெரியாது. கட்சிக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதிலும் பங்கேற்று பார்த்தது இல்லை. ஆனால் பெரும் செல்வந்தராக இருப்பதால், எப்படியாவது சீட் பெற்று அதிகாரத்திற்கு வர வேண்டும் என்றிருந்தார்.
அதனால்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது தேனியில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகிறார். இவர்களை எதிர்த்துப் போட்டியிட உள்ளூர் அ.தி.மு.க-வினர் யாரும் முன்வராத காரணத்தால், தொடர்ந்து வாய்ப்பு கேட்டு வரும் நாராயணசாமிக்கு இம்முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/5voUJCA
0 Comments