வாழ்த்துங்களேன்! இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்த மான வாழ்த்துங்களேன் பகுதியில், நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

வாழ்த்துங்களேன்

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்...

இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டா டும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

30.4.24 முதல் 13.5.24 வரை பிரார்த்தனைக்குப்

பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 24.4.24

முன்னூர் அருளாளப் பெருமாள்:

30.4.24 முதல் 13.5.24 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, முன்னூர் அருள்மிகு அருளாள பெருமாள் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

திண்டிவனம் - மரக்காணம் வழியில் உள்ள ஊர் ஆலங் குப்பம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர். இங்கே ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக அருள்கிறார் அருளாளப் பெருமாள். முற்காலத்தில் `சித்திர மேழி விண்ணகர் எம்பெருமாள்' எனப் போற்றப்பட்டாராம். நினைத்ததை நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதி இவர்.

இங்கு, பால வடிவில் அருளும் யோக நரசிம்மருக்கு ஏழு வியாழக்கிழமைகள் - ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட, நல்ல வேலை கிடைக்கும்; சகல பிரச்னைகளும் வைஷ்ணவிதேவியை வழிபட, காரியத் தடைகள் நீங்கும் என்கிறார்கள். அற்புதமான இந்தத் தலத்தில், வாசகர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேற வேண்டி, அவர்களின் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!



from Vikatan Latest news https://ift.tt/IhpsNCm

Post a Comment

0 Comments