``ஜாபர் சாதிக் அம்பலப்பட்டதனால் திமுக அழுக்காகவில்லை..!” - சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

``தி.மு.க-வின் `Invisible Member' எனச் சொல்லிவந்தீர்கள்.. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.. தேர்தல் பரப்புரைக்குகூட தி.மு.க உங்களைப் பயன்படுத்திக் கொள்ள வில்லையா?”

``இப்போதும் தி.மு.க-வின் `Invisible Member’ தான் நான். முழுநேரமாக ஒரு கட்சியில் இருப்பதைவிட வாசிப்பு இயக்கம், இலக்கிய மேடை, திரைப்படங்களில் நடிப்பது என சுதந்திர பறவையாக இருக்க விரும்புகிறேன். தி.மு.க கூட்டணியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை `நாற்பதே எல்லை, தோற்பது இல்லை’ என்ற நிலையை நோக்கி தி.மு.க கூட்டணி நகர்கிறது. எந்த குழப்பமும் இன்றி யார் தோற்கடிக்கப்பட வேண்டும் எனப் புரிந்து, `இந்தியா’ கூட்டணியாக ஒருங்கிணைந்து பா.ஜ.க எதிர்ப்பில் அசைக்க முடியாத உறுதியுடன் தி.மு.க கூட்டணி இருப்பதால் வெற்றியும் ஏற்கனவே உறுதியாகிவிட்டது”

ஸ்டாலின்

``ஜாபர் சாதிக், போதை பழக்கம் உள்ளிட்ட விவகாரங்களை எடப்பாடி பரப்புரையின் மையமாக மாற்றியிருப்பதால் தி.மு.க கூட்டணி கலக்கத்தில் இருக்கிறதாமே!”

`ஜாபர் சாதிக் அம்பலப்பட்டதனால் தி.மு.க அழுக்காகவில்லை. அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறான். கடல்கடந்து வரும் போதை பொருள் புழக்கத்துக்கும் போதையின் பாதைக்கு இந்திய இளைஞர்கள் போனதற்கு பா.ஜ.க-தான் பொறுப்பேற்க வேண்டும். ஸ்டாலின் தலைமையிலான அரசு அல்ல”

மோடி

``கச்சத்தீவு விவகாரம் குறித்து?”

``இந்தியாவின் அமைதியும் பாதுகாப்பும் நிரந்தரமாக்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் அது வரலாற்று கடமை.. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அதனை நிச்சயம் மேற்கொள்ளும். இப்போது பா.ஜ.க இதனை பேசுவது நிகழ்கால அரசியலை மறக்கடிக்கும் முயற்சி. ஒரு திசைத்திருப்பல் அவ்வளாவுதான்”

தி.மு.க கூட்டணிக்காக கமல் தமிழ்நாடெங்கும் பரப்புரை செய்கிறார்... திருமா-வை அப்படி அழைப்பதில்லையே ஏன்?”

``திருமாவளவன் ஒரு வேட்பாளர் என்பதை உணர்ந்து தி.மு.க அவருக்கு அந்த சுமையை கொடுக்காமல் உதவுகிறதே தவிர, அதன் பின்னணியில் வேறெந்த காரணமும் இல்லை. அதேசமயம் தமிழ்நாடெங்கும் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தி.மு.க கூட்டணிக்காக உழைத்து வருகிறார்கள்”

அண்ணாமலை

``பா.ஜ.க அமைத்திருக்கும் கூட்டணி பற்றி?”

``அது அதிகாரத்தாலும் பணத்தாலும் மட்டுமே அமைக்கப்பட்ட கூட்டணி. பா.ஜ.க-வுடன் பா.ம.க-வும் த.மா.க-வும் இமாலய தவறிழைத்துவிட்டனர். அந்த கூட்டணியை மக்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/CNeTsFX

Post a Comment

0 Comments