விருதுநகர்: `பிரதமர் மோடியை, மக்கள் நம்பவே கூடாது'- திண்டுக்கல் ஐ.லியோனி

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் `இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் ஐ.லியோனி அல்லம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழ்நாட்டு மகளிர் பொருளாதாரத்தை மகளிர் உரிமை திட்டத்தின் மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியிருக்கிறார். மகளிருக்கான இலவச விடியல் பயணம் மூலம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி வாய்வலிக்க பேசுகிறாரே தவிர, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை.

லியோனி

இந்தநிலையில் இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி கனவு கண்டு கொண்டிருக்கிறார். ஆட்சி முடிய போகும் கடைசி நேரத்தில், நாட்டு பெண்களுக்கு மகளிர் தின பரிசாக சமையல் சிலிண்டர் விலையை 50 ரூபாய் குறைந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக வருடாவருடம் மகளிர் தினம் வரத்தான் செய்தது. ஒவ்வொரு ஆண்டுக்கும், 50 ரூபாய் குறைத்திருந்தால் கூட இந்நேரத்திற்கு சிலிண்டர்விலை 550 ரூபாய்க்கு வந்திருக்கும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 9 ரூபாய் சம்பள பணம் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 100 வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

சமையல் சிலிண்டர்‌ விலை 400 ரூபாயாக குறைக்கப்படும். மத்திய மோடி அரசு, பெரும் பணக்காரர்களுக்கு 33 சதவீதமாக இருந்த வரியை 20 சதவீதமாக குறைத்து ரூ.1லட்சத்து 20 ஆயிரம் கோடியை சலுகை அளித்திருக்கிறது. காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால், பெரும் பணக்காரர்களுக்கு மீண்டும் வரி உயர்த்தப்படும். அந்த வரிவசூலில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் வழங்கப்படும்.

பரப்புரை

பெண்களுக்கு உயர்கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி அவர்களை நோக்கி இல்லம் தேடி கல்வி திட்டம் தந்தது தமிழக அரசு. பெண்களுக்கு உயர்கல்வி முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் தமிழகத்தில் 14 மாவட்ட ஆட்சியர்கள் பெண்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால், பிரதமர் மோடி போல மக்களை பார்த்து கூழைகும்பிடு போடும் நபரை மட்டும் நம்பவே கூடாது.

எனவே போலித்தனத்தை முறியடித்து பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக கூழைகும்பிடு போட்டு மக்களை ஏமாற்றி வந்த ஆட்சிக்கு முடிவுக்கட்டும் தேர்தல் இந்த மக்களவை தேர்தல். ஆகவே, மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்" என பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/HGFg8vb

Post a Comment

0 Comments