``சிஏஏ-வை ஆதரித்தது ஓ.பி.எஸ் மகன்; எடப்பாடியிடம் ஒப்புதல் கேட்கவில்லை!” - ஓ.எஸ்.மணியன் புது விளக்கம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய அவர், ``பாஜக-வுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கூட்டணி இல்லை என்பதை தெரிவித்துவிட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சி.ஏ.ஏ சட்டத்துக்கு லோக்சபாவில் அதிமுக சார்பில் ஏன் வாக்களித்தீர்கள் என பிரசாரத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கேட்கிறார்கள். அவர்களுக்காக நான் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைக்கு அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஓ.பி.எஸ். அவரின் மகன் ரவீந்திரநாத் எம்.பியாக இருந்தார். அவர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமியிடம் எந்த ஒப்புதலும் பெறாமல், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்ததால், ரவீந்திரநாத் தன்னிசையாக சி.ஏ.ஏ மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.

இது தான் உண்மையாக நடந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான், ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பழனிசாமியை பொதுச்செயலாளராக உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். ஆனால் இன்றைக்கு அதிமுக-வில் இரட்டை தலைமை இல்லாமல், ஒற்றை தலைமையில் கம்பீரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/D5eLTRc

Post a Comment

0 Comments