"பிரதமர் மோடி தமிழின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சியின் மீதும் அக்கறை செலுத்துகிறார். மோடியின் கரத்தை வலுப்படுத்த தமிழக மக்கள் தயாராகும் நேரம் வந்துவிட்டது..." என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா வாகன பேரணியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இரண்டு தேதிகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை வருகை தந்தார் அமித் ஷா.
நேதாஜி சாலை தண்டாயுதபாணி கோயில் முன்பாக வாகனப் பேரணி தொடங்கிய நிலையில் அமித் ஷாவிற்கு தொண்டர்கள் மயிலிறகு மாலை அணிவித்து பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதனைத் தொடர்ந்து ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் வாகனம் முன்பாக செல்ல அமித் ஷா உற்சாகமாக சென்றார். நேதாஜி சாலை தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்துண் வரையிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற ரோடு ஷோவின்போது சாலையின் இருபுறங்களிலும் நின்ற தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது அமித் ஷா கையில் தாமரை சின்னத்தையும் வெற்றிக்குறியாக இரு விரல்களையும் காண்பித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொண்டர்கள் அவருக்கு அணிவித்த மாலைகளை வேட்பாளருக்கு அணிவித்தார்.
இளைஞர்களும், மகளிர் அணியினரும் உற்சாகமாக நடனம் ஆடியபடி வாகனத்தின் முன்பாக ஊர்வலமாக வந்தனர். மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பலர் வந்தனர்.
தெற்கு ஆவணி மூல வீதியில் அமைந்துள்ள மதுரை ஆதீனம் மடத்தின் முன்பாக அமித் ஷாவை வரவேற்பதற்காக தொண்டர்களோடு தொண்டராக கையில் பதாகை பிடித்தபடி நின்றுகொண்டிருந்த மதுரை ஆதீனம் அமித் ஷாவிற்கு மாலை மற்றும் துண்டு அணிவித்து மரியாதை செய்தார்.
இதனைத்தொடர்ந்து விளக்குத்தூண் பகுதியில் பேசிய அமித் ஷா, "பாஜக வேட்பாளர் சீனிவாசனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளீர்கள், நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
இந்தமுறை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் கூட்டணியை விட்டு 40 தொகுதிகளிலும் பாஜக தனியாக களம் கண்டுள்ளது. அதிமுக, திமுக இருவருடைய ஊழல் காரணமாக தமிழகம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டுமோ, அந்த வளர்ச்சியை பெறவில்லை. பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தேச வளர்ச்சியில் அக்கறை செலுத்திவருகிறார்.
தற்போது தமிழக மக்களும் மோடி அவர்களின் கைகளை வலுப்படுத்தும் வகையில் வாக்களிக்கப்பதற்கான சூழல் வந்துவிட்டது. பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழக வளர்ச்சியின் மீதும் அக்கறை செலுத்தும்.
தமிழகத்தின் கௌரவத்தை இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பறைசாற்றி கொண்டிருப்பவர் பிரதமர் மோடி.
தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், அடுத்த தேர்தலில் உங்களிடம் தமிழில் பேசுவேன். நீங்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும், 400 தொகுதிகளில் வெற்றிபெற வைக்க வேண்டும்" என்று பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/WL7OQ8A
0 Comments