கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தேவநாதன் உள்ளிட்ட 4 பேர் வாழையும், கரும்பும் பயிர் வைத்திருந்தனர். அந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சுசிலா தேவநாதன் தரப்பினரும், மற்றொரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் டிராக்டர்கள் மூலம் வாழை மற்றும் கரும்பு பயிர்களை இரவோடு இரவாக உழவு செய்து அழித்துள்ளனர். அதில் 10 ஏக்கர்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மற்றும் கரும்பு பயிர்கள் அனைத்தும் நாசமானது. அதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.
பயிர்கள் சேதப்படுத்தப்பட்ட தகவலை அறிந்த சுசீலா தேவநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வெள்ளகேட் பகுதிக்கு திரண்டு வந்தனர். அப்போது, பயிர்களை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸார், விளைநிலத்தில் பயிர்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், முன் பகை காரணமாக பயிர்கள் அழைக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/GXxt3SJ
0 Comments