ஒரேநாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த 2 கொலைகள்... அதிர்ச்சியில் விருதுநகர் மாவட்டம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து நடந்த கொலைகளால் உள்மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், 'ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரின் மகன் எமராஜன் (38). கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, எமராஜனை அவரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்துவந்த எமராஜன் தனது தந்தை பரமசிவத்திடம் சென்று, கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுச்சென்ற தனது மனைவியை சமாதானப்படுத்தி திரும்ப வீட்டிற்கு அழைத்து வருமாறு தகராறு செய்திருக்கிறார்.

மருத்துவமனை

தந்தை - மகன் இடையேயான தகராறினை கேள்விப்பட்ட உறவினர் பாண்டி என்ற முனிஸ்வரன்(38) இருவரையும் சமாதானம் செய்வதற்காக பரமசிவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சமாதானப்படுத்த வந்த பாண்டிக்கும் எமராஜனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டி, வீட்டில் இருந்த அறிவாளால் எமராஜனை சரமரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த வெட்டு காயமடைந்த எமராஜன், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எமராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்தக்கொலை சம்பவம் குறித்து பரமசிவம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாண்டி என்ற முனீஸ்வரனை கைது செய்தனர்.

இதுபோல் மற்றொரு சம்பவமாக வத்திராயிருப்பில் சொத்து பிரச்னையில் தந்தையை மகன் வெட்டி கொலைசெய்துள்ளார். வத்திராயிருப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் மாமுண்டி. இவரின் மகன் கணேஷ்குமார். சென்னையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த கணேஷ் குமார், தனது தந்தை மாமுண்டியிடம் சொத்துக்கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதனை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் கண்டித்து வந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்கு வந்த கணேஷ்குமார், சொத்துகேட்டு தந்தையுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

காவல்நிலையம்

இதில் ஆத்திரம் அடங்காத கணேஷ்குமார், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவரின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மாமுண்டி அங்கேயே ரத்த வெள்ளத்தில் பலியானதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க வந்த, உறவினர்களுக்கு கணேஷ்குமார் கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு போலீஸார், மாமுண்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் வத்ராயிருப்பு போலீஸார் தலைமறைவான கணேஷ்குமாரை தேடி வருகின்றனர்' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/0l4mAtU

Post a Comment

0 Comments