மும்பையில் ஒருவர், தனது மனைவி தன்னி விட்டு பிரிந்து சென்றதுக்கு காரணம் எனக் கூறி மாமியாரை கொலை செய்துள்ளார். மும்பை விரார் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் கெய்ரே. இவரின் மனைவி கல்பனா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கல்பனாவுடன் அவரின் தாயார் லட்சுமியும் தங்கி இருந்தார். பிரசாந்த்துக்கு நிரந்தர வேலை கிடையாது. கூப்பிட்ட வேலைக்கு செல்வது வழக்கம். அதோடு மது அருந்தும் பழக்கமும் உண்டு. அதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படுவதுண்டு. இதனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கல்பனா தனது குழந்தைகள் மற்றும் தாயாருடன் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கும் அடிக்கடி பிரசாந்த் வந்து தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
தொடர்ந்து மீண்டும் வீட்டிற்கு வரும்படி பிரசாந்த் கேட்டுக்கொண்டார். ஆனால் கல்பனா செல்லவில்லை. இதனால் பிரசாந்த் வீட்டுச்செலவை சமாளிக்க சிரமப்பட்டார். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் பிரசாந்த் அங்கு வந்து கல்பனாவுடன் தகராறு செய்தார். உடனே தான் வெளியில் செல்கிறேன். நீங்கள் போங்கள் என்று தனது கணவரிடம் சொல்லிவிட்டு கல்பனா சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பிரசாந்த் மீண்டும் வீட்டிற்கு வந்து, `தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து வருவதற்கு நீங்கள்தான் காரணம்’ என்று கூறி மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபம் முற்றிய நிலையில் லட்சுமியை முடியை பிடித்து இழுத்து படுக்கை அறைக்கு இழுத்துச்சென்று அவரது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து தனது மாமியாரை கழுத்தில் குத்தினார்.
அப்படி இருந்தும் கோபம் தீராத பிரசாந்த் லட்சுமியின் வயிற்றிலும் சரமாரியாக குத்தினர். இதனை வீட்டில் இருந்த குழந்தைகள் பார்த்து வெளியில் சென்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்தனர். கத்தியால் குத்திவிட்டு ரத்தக்கரையுடன் தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அவரை பக்கத்து வீட்டுக்காரர்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரை சோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸார் குழந்தைகளிடமும் வாக்குமூலம் பெற்று விசாரித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/lJ9gbvI
0 Comments