போதைப்பொருள் கடத்தி வந்த குஜராத், ராஜஸ்தான் இளைஞர்கள் மீது குண்டாஸ் - ராணிப்பேட்டை போலீஸ் அதிரடி!

டந்த மாதம் 23-ம் தேதி அதிகாலை... ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியை அதிவேகமாக கடந்துசெல்ல முயன்ற எஸ்.யூ.வி காரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். சோதனையில், 600 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பிடிபட்டனர். விசாரணையில், குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த்ஜி - வயது 26 மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த தசரத்சிங் - வயது 27 ஆகியோர் எனத் தெரியவந்தது.

`குண்டர்’ தடுப்புக் காவல்...

போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு இருவருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க் இருப்பதாகவும், பெங்களூரு வழியாக சென்னைக்கு அவற்றைக் கடத்திச்செல்வதாகவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, `குண்டர்’ தடுப்புக் காவலில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் வளர்மதிக்கு எஸ்.பி கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் வடமாநில இளைஞர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.



from Vikatan Latest news https://ift.tt/AiJdxW4

Post a Comment

0 Comments