இரண்டே மாதத்தில் ரூ.175 கோடி மோசடி; சைபர் கிரைம் கும்பலுக்கு உதவிய SBI மேலாளர் - சிக்கியது எப்படி?!

இணைய தள குற்றங்கள் எந்த வடிவத்தில் வருகிறது என்று யூகிக்கவே முடியாத அளவுக்கு வருகிறது. வங்கி அதிகாரிகள் போன்று பேசி பொதுமக்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடிவிடுகின்றனர். சில நேரங்களில் எதாவது லிங்க் அனுப்பி அதன் மூலமோ அல்லது, உங்களது பெயரில் அனுப்பப்பட்ட கூரியரில் போதை பொருள் இருப்பதாக மிரட்டியோ பொதுமக்களிடமிருந்து இணைய தள குற்றவாளிகள் பணத்தை அபகரித்து விடுகின்றனர்.

இவ்வாறு அபகரிக்கப்படும் பணத்தை வேறு ஒரு வங்கிக்கணக்கில் வாங்கி தங்களது கணக்கிற்கு மாற்றிக்கொள்கின்றனர். இது போன்ற மோசடிகளுக்கு சில நேரங்களில் வங்கி அதிகாரிகளும் துணையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதுமட்டுமல்லாது அப்பாவி மக்களை ஏமாற்றி கமிஷன் தருவதாக கூறி, அவர்களது பெயரில் வங்கியில் கணக்கு திறந்து அந்த வங்கி கணக்கிற்கு இணைய தள குற்றத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை மோசடி கும்பல் வரவைக்கின்றனர். ஹைதாராபாத்தில் அது போன்ற மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டுள்ளது.

அக்கும்பல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் மதுபாபு என்பவருடன் சேர்ந்து இம்மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஷாம்சீர் குஞ்ச் எஸ்.பி.ஐ வங்கி கிளையில், 6 கரண்ட் அக்கவுண்டில் அபரிமிதமான பண பரிவர்த்தனை நடைபெறுவதாக இணையதள குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இணையத்தள குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட 6 வங்கி கணக்கு பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்தனர்.

அதில் குறுகிய காலத்தில் அந்த வங்கி கணக்குகளில் இருந்து கணிசமான பணபரிவர்த்தனைகள் நடந்திருந்தன. அதுவும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் இந்த பரிவர்த்தனை நடந்திருந்தது. வங்கி கணக்கு உரிமையாளர்கள் பெரிய அளவில் இணையத்தள குற்றத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்பட்டது. இரண்டு மாதத்தில் மட்டும் ரூ.175 கோடி அளவுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இந்த பணம் 600 பேரிடமிருந்து இணையத்தள மோசடியில் பெறப்பட்டது என்று தெரிய வந்தது.

இந்த மோசடி தொடர்பாக இணைய தள போலீஸார் கடந்த 24-ம் தேதி மொகமத் சோயப், மெஹ்மூத் பின் அகமத் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி கமிஷன் கொடுப்பதாக கூறி அவர்களது பெயரில் கரண்ட் அக்கவுண்ட் திறக்க செய்துள்ளனர். காசோலை புத்தகம் கிடைத்ததும் அதனை வாங்கி, அதில் வங்கி கணக்கு உரிமையாளரிடம் கையெழுத்து வாங்கிக்கொள்கின்றனர். இந்த வங்கி கணக்கு திறப்பது, ஆவணங்களை ஏற்பாடு செய்வதில் மொகமத் சோயப் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதோடு வங்கி கணக்குகள் திறக்க எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் மது பாபு உதவி செய்து குற்றவாளிகளிடமிருந்து கமிஷன் பெற்று வந்துள்ளார். மொகமத் சோயப்பிடம் விசாரணை நடத்தி மோசடிக்கு உதவிய வங்கி மேலாளர் மதுபாபு மற்றும் ஜிம் பயிற்சியாளர் உபாதியா சந்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மோசடிக்கு காரணமான முக்கிய குற்றவாளி துபாயில் இருந்து கொண்டு செயல்படுகிறான். இந்தியாவில் இருப்பவர்கள் இணையத்தள குற்றத்தின் மூலம் வங்கி கணக்கிற்கு வரும் பணத்தை எடுத்து அதனை இதில் தொடர்புடையவர்களுக்கு கமிஷன், பங்கு கொடுத்துவிட்டு எஞ்சிய பணத்தை ஹவாலா முறையிலும், கிரிப்டோகரன்சி மூலம் துபாய் அனுப்பி வைக்கின்றனர். இதில் இந்தியாவில் வங்கி கணக்கு திறக்க மொத்தம் 5 பேர் உதவி செய்துள்ளனர். வங்கி மேலாளர் மதுபாபு எந்த கேள்வியும் கேட்காமல் கணக்கு திறந்து கொடுத்து குற்றத்திற்கு உதவி செய்துள்ளார். அவ்வாறு திறக்கப்பட்ட 6 கரண்ட் அக்கவுண்ட் மூலம் இரண்டு மாதத்தில் ரூ.175 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/e5zfmdo

Post a Comment

0 Comments