வயநாடு நிலச்சரிவு: மலப்புறம் மாவட்டத்தில் உடல்கள் மீட்கப்படும் சோகம் - மீட்புப்பணிகளின் நிலை என்ன?!

கேரள மாநிலம் வயநாடு முண்டகை, சூரல்மலை-யில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. 7-ம் நாளான நேற்றைய நிலவரப்படி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 386 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. காணாமல்போன 180 பேர்களை தேடும்பணி தொடர்கிறது. ராணுவம் கூறும்வரை தேடும் பணி தொடரும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உடல் நசுங்கி அடையாளம் தெரியாத உடல்கள் சர்வமத பிரார்த்தனையுடன் புத்துமலையில் அடக்கம் செய்யப்பட்டன. முதல் கட்டமாக 16 உடல்களும், இரண்டாம் கட்டமாக 14 உடல்கள் என மொத்தம் 30 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. அடையாளம் காணப்படாத உடல்களில் டி.என்.ஏ சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ சாம்பிள் எண்கள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சாலியாற்றில் சடலங்களை தேடும் பணி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் உடல்கள் சாலியாற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மலப்புறம் மாவட்டம் நிலம்பூரில் சாலியாற்றில் அதிகமான உடல்களும், உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்புப்படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் சாலியாற்றில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலியாற்றில் இருந்து இதுவரை 75 உடல்களும், 158 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. சாலியாறு பாய்ந்து செல்லும் வனப்பகுதிகளில் சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மலப்புறம் சாலியாற்றில் மீட்கப்படும் உடல்கள்

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை கேரளா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சட்டவிரோத குடியேற்றமே நிலச்சரிவுக்கு காரணம் எனவும். வனப்பகுதியை ஆக்கிரமிப்பதில் அரசியல் தலைவர்கள் துணை நிற்கிறார்கள் எனவும் மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் விமர்சித்துள்ளார். அதற்கு பதிலளித்த கேரளா வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறுகையில், "விஷயங்களை புரிதல் இல்லாமல் மத்திய அமைச்சர் பேசுகிறார். என்ன நடந்தது என புரிந்துகொண்டு பேச வேண்டும். ஒரு பேரிடர் சமயத்தில் யாராவது கூறியதை கேட்டுவிட்டு யாரையோ திருப்திப்படுத்த கருத்து தெரிவிப்பது நன்மை பயக்காது. இந்த விஷயத்தில் ஆதாரம் இருந்தால் ஏற்கனவே அவர்கள் மாநில அரசுக்கு தெரிவித்தார்களா? மனிததன்மை இல்லாமல் சும்மா கருத்து சொல்வது பேரிடர் காலக்கட்டத்தில் நல்லதல்ல" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/cd31bWD

Post a Comment

0 Comments