ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசுப் பள்ளியில், இன்று 15 வயது மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், ராஜஸ்தான் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு மாணவர்களுக்கு மத்தியில் நடந்த வாக்குவாதத்தில், ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியிருக்கிறார். இதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் கூடிய பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களால் பதற்றம் ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. இதில், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள் தீக்கிரையாகியிருக்கிறது. நகரின் சில பகுதிகளில் கல் வீசப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை லத்தி சார்ஜ் செய்தது.
பாரதிய நாக்ரிக் சுரக்ஷாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் போஸ்வால், அந்தப் பகுதி மக்களிடம் ``ஒரு மைனர் மாணவர் கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்போது அவர் நலமாக உள்ளார். வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் தகவலின் உண்மை தன்மையை ஆராய, காவல்துறையிடம் அதை சரிபார்க்கவும். குற்றம் சாட்டப்பட்ட மாணவர் காவல்துறை பாதுகாவலில் இருக்கிறார். அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Vikatan Latest news https://ift.tt/HYDf9d6
0 Comments