``ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வாய்ப்பில்லை..!" - சொல்கிறார் செல்வபெருந்தகை

விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை கலந்துக்கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "இந்திய மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி பற்றி பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் அந்த தாக்கம் படர்கிறது. 1967-க்கு முன்பு இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், எப்படி காங்கிரஸ் கட்சி வழிகாட்டியதோ, அதேபோல் இனி வரும் காலங்களிலும் வழிகாட்ட வேண்டும். தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படுத்த வேண்டும். விருதுநகரில் இருந்து புறப்பட்ட தீ தான் இந்தியா முழுவதும் பரவியது.

செல்வபெருந்தகை

காங்கிரஸ், மக்கள் இயக்கமாக மாற விருதுநகரில் காமராஜர் செய்த பணி அளப்பரியது. அவர் தலைவராக இருந்தபோது கட்சி கட்டமைப்பில் அவர் செலுத்திய கவனம், செயல்பாடுதான் இன்று காங்கிரஸ் கட்சியை ஆலமரம் போன்று கம்பீரமாக நிற்க செய்கிறது. கட்சியை வலுப்படுத்துவதற்கு விருதுநகர் வழிகாட்டட்டும். இங்குள்ள எம்.பி., அந்த பொறுப்பை எடுத்து கொள்ளவேண்டும். கட்சியை எப்படி வலுவாக்க வேண்டும் என்பதை செயல்படுத்தி காட்டி எல்லா மாவட்டங்களுக்கும் முன்னோடியாக இருக்க வேண்டும் என உரிமையோடு கேட்கிறேன். நான் தலைவராக அறிவிக்கப்பட்டபோது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என ராகுல் கூறினார்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். இந்த கட்சியில் உள்ள எல்லோரும் தலைவர்கள் தான். நான் வகிப்பது வெறும் பொறுப்புதான். லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் எவ்வித சமரசமும் இன்றி பேசுகிறார். இந்த நுாற்றாண்டில் மிகச்சிறந்த அரசியல் தலைவர். திருநெல்வேலிக்கும், கோவைக்கும் வரும்போது என்னிடம் பேசினார். தமிழக மக்கள் மீது நம்பிக்கையோடு இருப்பதாக என்னிடம் கூறினார். வரும் காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வளர்ச்சி உள்ளது. மக்கள் இக்கட்சியை நம்புவார்கள். கட்சியில், இளைஞர்களை அதிகம் சேர்க்க வேண்டும்" என்றார்.

காங்கிரஸ்

முன்னதாக விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு வருகை வந்த அவர், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "மண்ணில் மனிதர்கள் உள்ள வரை மறக்க முடியாத மாமனிதர் காமராஜர். அவருடைய வழியில் கட்சியை வலுப்படுத்தவும், கட்டமைப்பை மேம்படுத்தவும் உறுதி ஏற்கிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டம் வாய்ப்பில்லாத ஒன்று" எனக் கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/vR2KQST

Post a Comment

0 Comments