மகள் முறையுள்ள சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் - மனைவி கொடுத்த புகாரில் போக்சோவில் கைது!

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அக்பர். இவருக்கு மனைவியும், 15 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். முகமது அக்பரின் மனைவி, கருத்து வேறுபாட்டின் காரணமாக, அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், காட்டூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றிவந்த ஜோதி (எ ) ராஜா முகமதுவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனக்கும், முகமது அக்பருக்கும் பிறந்த அந்த 15 வயது பெண் குழந்தையை தன்னோடு வைத்து வளர்த்து வந்துள்ளார்.

திருச்சி

இந்த சூழலில், ராஜா முகமது இரவில் தூங்கும்போது, மனைவியின் 15 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், அதை தனது கைப்பேசியில் படம், வீடியோவாக எடுத்தும் வைத்திருந்தாராம். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜா முகமதுவை கைதுசெய்தனர். அவரை திருச்சி 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.



from Vikatan Latest news https://ift.tt/Yze8VNC

Post a Comment

0 Comments