நடிகர் அஜித் பல நாட்டு கார்களை ஓட்டி டிரைவிங்கை அனுபவிப்பதும், ரேஸ் ட்ராக்கில் காரை பறக்கவிட்டு என்ஜாய் செய்தும் வருகிறார்.
சமீபத்தில் ஃபெராரி, லம்போகினி, போர்ஷே, பி.எம்.டபள்.யூ ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டிப்பார்த்த அஜித், சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஃபெராரியின் சிவப்பு நிற SF90 Stradale ஸ்போர்ட்ஸ் காரை துபாயில் வாங்கியிருந்தார். தற்போது போர்ஷேவில் 911 GT3 RS எனும் ஸ்போர்ட்ஸ் காரை அஜித் ரசித்து சுற்றிப் பார்த்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார் ஆர்வலர்களிடையே இந்த போர்ஷே 911 GT3 RS அல்ட்ரா மாடர்ன் ஸ்போர்ட்ஸ் காரில் என்னதான் இருக்கிறது என்பது டாக் ஆஃப் தி டவுனாகியிருக்கிறது.
இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்!
இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 2.75 கோடி ரூபாய். ஆன்ரோடுக்கு வரும்போது சுமார் 3 கோடியைத் தாண்டிவிடும். விரும்பியபடி கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம். அப்படி கஸ்டமைஸ் செய்தால் இதன் விலை இன்னும் எகிறிவிடும். இது ஒரு கூபே ஸ்போர்ட்ஸ் கார் என்பதால் ஃபார்முலா 1 கார்போலவே செம ஸ்டைலாக இருக்கும். முழுக்க முழுக்க லைட் வெயிட் அலுமினியம் பாடியால் தயாரிக்கப்பட்ட இதன் எடை 1,493 கிலோதான்.
இது ஒரு 2 டோர் கார்தான். காரின் உள்ளே நுழைந்தால் லெதர் வாசம்தான் நிறைந்திருக்கும். சீட்கள், ஸ்டீயரிங் வீல், கியர் ஷிஃப்ட் லீவர், டோர் பேனல், ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட், ஆர்ம்ரெஸ்ட் என எல்லாமே ப்ரீமியமான லெதர்மயமாகத்தான் இருக்கும்.
இதன் 6 சிலிண்டர்கள் கொண்ட 4000 சிசி இன்ஜினின் பவர் 510bhp. அதிகபட்ச டார்க் 470Nm. டாப் ஸ்பீடு 320 கிமீ. வழக்கமாக எக்ஸாஸ்ட் பைப்கள், காரின் வலதுபுறத்தில்தானே இருக்கும். இதில் இரட்டை சைலன்ஸர்கள் நடுவில் வேகமெடுக்க தயாராக இருக்கும். காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் இதன் ஏரோடைனமிக் டிசைன், பின் பக்க ஸ்பாய்லர் வேகத்தைக் கூட்ட 0-100 கிலோமீட்டரை வெறும் 3.9 விநாடிகளில் அசால்ட்டாகத் தொட்டுவிடும். இதன் 6 சிலிண்டர் இன்ஜினிலிருந்து வரும் கொஞ்சம்கூட அதிர்வில்லாத 'வ்ர்ர்ர்ர்ரூம்' சத்தமும், நொடிகளில் வேகத்தைக் கூட்டும் கியர் ஷிப்ட்டும், வளைவுகளில் அசைவின்றி அலேக்காகச் செல்லும் இதன் ஸ்டெடியும் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களுக்கு நிச்சயம் ஓர் அலாதியான டிரைவிங் அனுபவத்தைக் கொடுக்கும்.
போர்ஷே நிறுவனம் தங்களது ஒவ்வொரு மாடலிலும் இந்த டிரைவிங் அனுபவத்தை இன்னும் ஸ்பெஷலாக்கிக் கொண்டேதான் செல்கிறது. அதில் இந்த '911 GT3 RS' கூடுதல் ஸ்பெஷலாக டாப்பில் இருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
from Vikatan Latest news https://ift.tt/TRma5Hu
0 Comments