``கூட்டணியில் இருந்தும் இப்படி பேசுகிறாரே என்று பாராட்ட ஆள் இல்லை" - திருமாவளவன் ஓப்பன் டாக்

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் தமிழ்நாடு ஜமாத்உல் உலமா சபை நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமாவளவன், "மதுரையிலிருந்து தான் என் அரசியல் பயணம் தொடங்கியது. 90-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர்களோடு சேர்ந்து மக்கள் பணி, சமூக பணியாற்றியிருக்கிறேன். மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது உதவியவர்கள் இஸ்லாமியர்கள். 30 ஆண்டுகளாக இணைந்து பணியாற்ற வைத்திருப்பது அவர்களுடைய மனிதநேயம் என்ற பண்புதான். இன்றுவரையில் அந்த உணர்வுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த சமூகத்திற்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.” என்றார்.

மதுவிலக்கு

தொடர்ந்து அவர், ``அவரவர் மதம், நம்பிக்கை அவரவருக்கு என்று எந்த மதத்திற்கும் எதிராக வெறுப்பு அரசியலை விதைக்காமல் சமய நல்லிணக்கத்தை பேணுகிற மாண்பு இஸ்லாமிய சமூகத்திடம் மேலோங்கி இருப்பதை நாம் அறிவோம். இந்த விழாகூட சமூக நல்லிணக்கத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது

நபிகள் நாயகத்தை பின்பற்றி சமூக நல்லிணக்கமே முதன்மையானது என்று திரும்ப திரும்ப சொல்லும் இஸ்லாமிய சமூகத்திடம் தலைவணங்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறேன். அண்மையில் வக்பு வாரியம் தொடர்பான ஒரு சட்ட மசோதா வந்தது. அதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தோம். விசிக சார்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தோம். இன்றைக்கு அது இரண்டு அவைகளையும் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு மீளாய்வுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு அவர்கள் எதிர்க்கட்சிகளை பொருட்படுத்த மாட்டார்கள். வெளியேற்றிவிட்டு சட்டங்களை நிறைவேற்றுவார்கள். ஆனால், காலம் இப்போது எதிர்க்கட்சிகளை வலுவாக்கி வைத்திருக்கிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு நானும் தோழர் ரவிக்குமாரும், மனு அளிக்க கடைசி நாள் என்பதால் விரைந்து டெல்லிக்கு சென்று அதற்கென்று அமைக்கப்பட்டிருக்கிற தலைவர் ஜெகதாம்பிகா பால் அலுவலகத்திற்கு சென்று, அந்த சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்கிற மனுவினை வழங்கி விட்டு வந்தோம். விசிக-வின் 2 உறுப்பினர்களும் இஸ்லாமியர்களுக்காக போராடுகிற, வாதாடுகிறவர்கள் என்பதை மறுபடியும் பதிவு செய்கிறேன்.

திருமாவளவன் எம்.பி

நபிகள் நாயகம் உலகுக்கு எத்தனையோ போதனைகளை வழங்கியிருக்கிறார். அதில், மானுடம் தழைப்பதற்கு மதுவிலக்கு என்கிற கோரிக்கையை விசிக எடுத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் இஸ்லாத்தை பின்பற்றி இயங்குகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று

நாங்கள் நடத்துகிற இந்த மாநாடு குறித்து கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி பேசலாமா என்று சிலர் கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்துகொண்டே இப்படி பேசுகிறாரே என்று பாராட்ட ஆள் இல்லை.

கூட்டணியில் இருந்துகொண்டே இப்படியொரு கோரிக்கையை வைப்பதற்கு மக்கள் நலம்தான் காரணம். வேறு எந்த நோக்கமும் இல்லை, அதையும் சில பேர் அரசியலோடு இணைத்து பார்க்கிறார்கள். திருமாவளவன் காய் நகர்த்தி பார்க்கிறார் என்றெல்லாம் கதை கட்டுகிறார்கள்.

ஆளும் கட்சிக்கு இதில் நெருக்கடி அல்லது நெருடல் ஏற்படும் என்பது தெரியும். ஆனாலும் அதைவிட முக்கியமானது மக்கள் நலம், மனித வளம்தான்.

முழு மது ஒழிப்புக்கு ஏன் டெல்லி அரசுக்கு கோரிக்கை வைக்கிறீர்கள் என கேட்கிறார்கள்? தமிழ்நாட்டில் மட்டும் கேட்பது எப்படி சரியாக இருக்க முடியும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் மது விலக்கு வேண்டும் என்று கேட்பது நல்லதுதானே. நாடு முழுவதும் எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

திருமாவளவன்

நாடு முழுவதும் மது ஒழிப்பது தொடர்பாக 1954-ல் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏராளமான பரிந்துரைகளை தந்தது. 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றெல்லாம் பரிந்துரைத்திருந்தது, அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 2024-ல் நாம் கோரிக்கை வைக்கிறோம். 1955-ல் கொடுத்த பரிந்துரைகள் இப்போது நாம் நினைவூட்டுகிறோம். ஆகவே இதை நாம் தேசிய பார்வையோடுதான் அணுக வேண்டியிருக்கிறது. குரல் எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது, மதம் சார்ந்த பிரச்னைகளுக்கு, சாதி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண தேசிய பார்வை தேவை, அதைப்போல மதுவை ஒழிப்பதற்கும் தேசிய பார்வை தேவை

நபிகள் நாயகம், குறிப்பிட்ட சமூகத்திற்காக, மதத்திற்காக மட்டும் போதிக்கவில்லை. ஒட்டுமொத்த மனித குலத்துக்கே சொல்லி இருக்கிறார்ம்

விசிக முன்னெடுத்திருக்கின்ற மது ஒழிப்பு, போதைப் பொருள் ஒழிப்பு என்கிற கருத்துக்கள் நபிகள் நாயகத்தின் போதனைகளோடு பொருந்துவதால், உங்களின் நல்ல ஆதரவு தேவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from Vikatan Latest news https://ift.tt/adVJ4FR

Post a Comment

0 Comments