Brain Health: ஆரோக்கியமான மூளைக்கு.. சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே போதும், டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோய்கள் வராது என்று நம் மூளைகளை ஆசுவாசப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

தற்காலத்தில் பலரும் மூளைக்கு ஆரோக்கியம் தராத உணவுகளையே உண்டு வருகிறார்கள். அதனால்தான், இன்றைக்கு பலருடைய மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தடுக்க, நாள்தோறும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையையும் அந்த ஆய்வு விடுத்திருக்கிறது.

சரி, மூளை ஆரோக்கியமாக இருக்க என்னென்ன சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர் பாலபிரசன்னா அவர்களிடம் கேட்டோம்.

Brain - Representational Image
Brain - Representational Image

''வயதாக ஆக மனித உடலில் வீக்கங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் நம் உடலில் உள்ள நியூரான்கள் அழிந்து, புதிய நியூரான்கள் உருவாக முடியாது. விளைவு, மூளை பாதிக்கப்படுகிறது. பொதுவாக, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா, நடுக்கம், பதட்டம், மன அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம். இவை அனைத்தும் வயது மூப்பால் வரக்கூடியவையே. என்றாலும், ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டால் இந்த நோய்களின் வீரியம் அதிகமாக இருக்கும்.

தினமும் ஆரோக்கியமற்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிட்டு, மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder) என்ற பிரச்னை வரலாம். இதனால், மன அழுத்தம், படிப்பில் ஆர்வமின்மை, நினைவாற்றல் குறைவு, கவனச்சிதறல், ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவார்கள்.

மூளை
மூளை

பொதுவாக, நல்ல கொழுப்புள்ள உணவுகள், அதாவது ஒமேகா-3 நிறைந்த நட்ஸ், சிறுதானியங்கள் ஆகியவை உடலில் ஏற்படுகிற வீக்கங்களைக் குறைப்பதற்கும், புதிய நியூரான் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும். இதன் மூலம் டிமென்ஷியா போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.

நிறைய கீரை வகைகள், பெர்ரி பழங்கள், கிரீன் டீ போன்ற உணவுகளிலும் ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளன. இவை மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகின்றன. தவிர, நமது மூளைக்கும் குடலுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

உணவியல் நிபுணர் பாலபிரசன்னா
உணவியல் நிபுணர் பாலபிரசன்னா

உங்கள் உணவில் சர்க்கரை அளவு குறைவாக இருக்க வேண்டும், டால்டா போன்ற எண்ணெய் வகைகளைத் தவிர்க்க வேண்டும், முக்கியமாக ஆல்கஹால் தவிர்க்கப்பட வேண்டும்.

மனித மூளைக்கு தினசரி ஒரே மாதிரி வேலை தரக்கூடாது. தினம் தினம் வித்தியாசமான செயல்களைச் செய்ய வேண்டும். அடிக்கடி மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களை செய்துவந்தால், உங்கள் மூளை எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் உணவியல் நிபுணர் பாலபிரசன்னா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news https://ift.tt/ZnNolMX

Post a Comment

0 Comments