ஜிப்லி ஆர்ட் தொடங்கி ஃபேமிலி போட்டோ ட்ரெண்ட் வரை சோஷியல் மீடியாவில் தினம் தினம் புதுப்புது விஷயங்கள் ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு விஷயம் டிரெண்ட் ஆகும் போது நாமும் அந்த ட்ரெண்டில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்ள அதை ஃபாலோ செய்து பதிவிடுகிறோம்.
இப்படியான வைரல் பதிவுகள் சில நேரங்களில் நம்முடைய துறை, திறன் ஆகியவற்றுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 'இம்மெச்சூரிட்டி என்று காட்டவும் வாய்ப்பு உண்டு' என்கிறார்கள் சில மனித வள மேம்பாட்டு அலுவலர்கள். உண்மையில் இது மெச்சூரிட்டி சம்பந்தப்பட்டதா? 'இதற்கு பின் இருக்கும் உளவியல் சிக்கல்கள் என்ன?' என்று உளவியல் நிபுணர் ப்ரீனுவிடம் பேசினோம்.
"மனிதர்கள் எல்லோரும் லைக்ஸ், கமென்ட்ஸ்,ஷேர் என அல்காரிதம் பின்னால் ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான்,' நானும் வைரல் ஆக வேண்டும்' என்ற சிந்தனையின் அடிப்படை. இதற்கு சில உளவியல் காரணங்களும் இருக்கிறது.

Bandwagon Effect
மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்பதைப் பார்த்ததும் அது நமக்கு பொருந்துமா?, தேவையா? என்று யோசிக்காமல் அதே விஷயத்தை நாமும் செய்வதை பேண்ட் வேகன் எஃபெக்ட்( Bandwagon Effect) என்பார்கள். இதுதான் ட்ரெண்ட் ஃபாலோ பண்ணுவதிலும் நடக்கிறது. 'ஏன் இந்த ரீல்ஸ் போட்ட'? என்று சிலரிடம் கேட்டால்,' எல்லாரும் போட்டாங்க, நானும் போட்டேன்' என்று பதில் சொல்வார்கள்.
உளவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், பொதுவாக நிறைய பேர் ஒரு விஷயத்தைச் செய்யும் போது, அது சரியானது என்று நம் மூளை நம்பும். அதனால் நாமும் அதே விஷயத்தைச் செய்வோம். கூடுதலாக சோஷியல் மீடியாக்களில் லைக்ஸ், கமென்ட் கிடைக்கும் போது, நம் மூளையின் ரிவார்டு சிஸ்டம் வேலை செய்து, டோபமைன் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கும். அந்த சிறிய சந்தோஷத்திற்காக ட்ரெண்டை பலரும் ஃபாலோ செய்கிறார்கள்.
Fear of Missing Out (FOMO)
“நான் இதை பண்ணலன்னா ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மிஸ் பண்ணிடுவேனோ'ங்கிற பயம். இந்த பயம், நம்மை பல நேரங்களில் யோசனை இல்லாமல் முடிவெடுக்க வைக்கும். சோஷியல் மீடியாவில் மற்றவர்களின் டிராவல், சக்சஸ் ஸ்டோரி, மகிழ்ச்சியான மனநிலை போன்றவற்றை பார்க்கும் போது, நான் இதை செய்யலேனா, அவுட்டேட்னு சொல்லுவாங்களோனு மனசுக்குள்ள ஒரு பயம் வரும்.
இதனை, 'ஃபியர் ஆஃப் மிஸ்ஸிங் அவுட்' என்பார்கள். இந்த எண்ணம் தோன்றும் பட்சத்தில் தேவையில்லாத ஒப்பீடு வரும். கரியர், ட்ரெண்ட், ரிலேஷன் ஷிப் என எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பு இருக்கும். இதனால் முடிவுகளில் சொதப்பல்கள் வரும். ஆனால் உண்மை என்னவென்றால் எல்லா வாய்ப்புகளும் நமக்கானது இல்லை. பல நேரங்களில் FOMO-வை கட்டுப்படுத்தவது நல்லது.
ட்ரெண்டில் இருக்கும் சிக்கல்கள்
பொழுது போக்கிற்காக ட்ரெண்ட்டை சிலர் ஃபாலோ செய்வார்கள். மாடர்ன், ஆக்டிவ், கிரியேட்டிவ் என்று காட்டிக்கொள்ள சிலர் ட்ரெண்ட் ஃபாலோ செய்வார்கள். இது பெர்சனல் பிராண்டிங் செய்ய உதவும். ரிலாக்ஸ் தரும். நமக்கு பொருந்தாக ஒன்றை சோஷியல் மீடியாக்களில் பதிவிடும் போது அது சார்ந்த சிக்கல்களும் வரலாம். 'என் பெர்சனல் வேறு', 'தொழில் வேறு' பெர்சனல் வாழ்க்கையில் என் ஷோஷியல் மீடியாவில் நான் விரும்புவதை பதிவிடுவதில் என்ன தவறு இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி வரும்.
நிச்சயம் எந்தத் தவறும் இல்லை. இது உங்கள் வாழ்க்கை உங்கள் உரிமை. ஆனால், நீங்கள் பதிவிடும் தகவல்கள் உங்கள் தரத்தை குறைக்காதவாறு இருப்பது நல்லது. ட்ரெண்ட்டை ஃபாலோ செய்யும் போது சில நேரங்களில் உங்கள் கன்ட்டென்ட் மற்றவர்கள் கிரியேட் செய்த வண்ணம் வடிவம், பாடல், கருத்து , தகவல் ரிபீட் ஆகும் போது தகவலை அல்லது வீடியோக்களை உருவாக்குபவரின் தனித்தன்மை கேள்விக்குறியாகும்.
ஆடியன்ஸ் மனதில் இவர் ட்ரெண்ட் ஆவதற்கு மட்டும் வீடியோக்கள் போடுகிறாரா? என்ற சந்தேகம் வரும். உங்களுக்கு லைக்ஸ், கமென்ட் ஷேர் வந்தாலும் உங்களுடன் ஆடியன்ஸ் கனெக்ட் ஆகமாட்டாங்க. இதை தவிர்க்க வேண்டும் என்றால் ட்ரெண்ட் ஆக இருந்தாலும் உங்கள் கன்ட்டெண்ட்டில் உங்களின் கருத்து எமோஷனல், எக்ஸ்பிரியன்ஸ், எல்லாம் புதுமையாக இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்." என்கிறார்.!
from Vikatan Latest news https://ift.tt/gB7sCQn
0 Comments