ஜோதிடமாமணி கே.எம். முருகேசன் கணித்த பிறந்த தேதி பலன்கள்... ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 3 வரை

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில் ரீதியான சிந்தனைகள் அதிகரிக்கும். சம்பாதிப்பதற்கான நோக்கங்கள் வலுப்பெறும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும்; புதிய தொழில்களைத் தொடங்குவ தற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

கணவன்–மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேர வாய்ப்புகள் உண்டு. அரசு அதிகாரிகளின் மூலம், தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.

தந்தையின் உடல்நலம் மேம்படும். தந்தையின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்கள், மைத்துனர்கள் ஆகியோராலும் நல்ல உதவிகள் கிடைக்கும்.உத்தியோகத்தின் காரணமாக பெற்றோரைப் பிரிந்து வசிப்பவர் களுக்கு, மீண்டும் பெற்றோருடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு அமையும்.

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும். குடும்பத் தில் சுபச் செலவுகள் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். தொழிலாளர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்வது நல்லது.

கவனம் தேவைப்படும் நாள்: ஜூலை - 26

2, 11, 20, 29, ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிலருக்குப் புதிய ஆபரணங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. சுற்றுலா செல்லும் வாய்ப்பும் அமையும்.

கணவன்–மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான சாதகமான சூழ்நிலைகள் காணப் படும். அந்நிய மொழி மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்களால் சில உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு கள் உள்ளன. தாய் வழி முன்னோர் களின் சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. சிலருக்கு, குறிப்பாக குலதெய்வம் நாக தெய்வமாக இருப்பவர்களுக்கு, சில நன்மைகள் கிடைக்கக்கூடும். மேலும், பலருக்குப் பெண்களால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இருப்பினும், பங்காளிகளிடமும் உடன்பிறந்தவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்களிடம் கவனக் குறைவாகப் பேசினால் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். சொத்து, நிலம், வீடு தொடர்பான காரியங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை தற்போது ஒத்திவைத்து, இந்தக் காலகட்டம் முடிந்த பிறகு செய்து கொள்வது நல்லது. இல்லையெனில் வீண் பிரச்னைகள் உருவாகலாம்.

கவனம் தேவைப்படும் நாள்: ஜூலை - 24

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பிள்ளைகள் மேன்மை அடைவார்கள். அவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் ஆகாமல் நீண்ட காலமாக தாமதமும் தடைகளும் இருந்து வந்த சிலருக்கு, தற்போது சிறந்த திருமண காலமாக இருக்கும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நீண்ட காலமாக வாரிசு இல்லாமல் இருப்பவர் களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள், தங்களது குல தெய்வத்தை கண்டறிந்து வழிபடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

ஆன்மிகப் பயணங்கள் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாக்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர் கள். மாமன் மற்றும் மைத்துனர் களால் சில உதவிகள் கிடைக்கக் கூடும். அதேபோல் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கணவன்-மனைவி உறவில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்குப் பெண்க ளால் தொல்லைகள் ஏற்படலாம். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், தேவையற்ற பிரச்னை களிலிருந்து விலகி இருக்கலாம். பேச்சில் கவனம் தேவை.

கவனம் தேவைப்படும் நாள்கள்:

ஜூலை - 24, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலமாக இருக்கும். அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுக் கடன் உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்புடையவர்களுடன் நல்ல உறவும், அவர்களால் தேவையான உதவிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தந்தையுடன் இருந்த மனக் கசப்புகள் நீங்கும். தந்தை மேன்மை அடைவார். அவரால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.

மன மகிழ்ச்சி தரும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். சிலர், உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும், நிலம், வீடு, சொத்து தொடர்பான செயல்களை சற்று தள்ளிப்போடுவது நல்லது. தற்போது அவற்றை மேற்கொண்டால், அவை சிறப்பாக நிறைவடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

உடன்பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகளிடம் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நல்லது. அவர்களுடன் பகைமை, விரோதம் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத் தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. என்றாலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.

கவனம் தேவைப்படும் நாள்கள்: ஜூலை - 27

7 ,16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இதுவரை உங்களுக்கு இருந்த மனக் கவலைகளும் மனக்குறை களும் நீங்கி, மனதில் ஒரு தெளிவும் மனமகிழ்ச்சியும் ஏற்படும். தாயைப் பிரிந்து வருத்தத்துடன் இருந்தவர் களுக்கு, தங்களுடைய தாயுடன் மீண்டும் சேர்ந்து மகிழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

கணவன்–மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்–வாங்கலில் சாதகமான சூழ்நிலை கள் காணப்படும். சிலருக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் அமையக் கூடும். திருமணம் ஆகாத சிலருக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெண்களால் மனமகிழ்ச்சி கிடைக்கும்.

வெண்மையான பொருட்கள், பால், நீர், மென்மையான பொருட் கள் மற்றும் திரவப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு இது மிகவும் சிறந்த காலமாக இருக்கும். ஏஜென்சி மற்றும் இடைத்தரகர்களாக தொழில் செய்பவர்களுக்கும் இது சிறப்பான காலமாக அமையும்.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் சொத்து மற்றும் நிலம் தொடர்பான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பங்காளிகள் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்களால் சில தொல்லைகளும் வம்பு, வழக்குகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், உடன் வேலை பார்ப்பவர்களிடமும் தொழிலாளர்களிடமும் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டியது அவசியம். வெளியூர்களில் இருந்து நல்ல செய்தி ஒன்று வந்து சேர வாய்ப்பு உண்டு.

கவனம் தேவைப்படும் நாள்கள்: ஜூலை - 26, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சொத்துகள் சேரும் காலம் இது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தால், அவை தற்போது தீர்ந்து தங்களுக்கு சாதக மாக முடிவடையும். உடன்பிறந்த வர்களும் பங்காளிகளும் தங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

சிலர் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறு வார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல, சிறப்பான சூழ்நிலைகள் காணப்படும். கொடுக்கல்–வாங்கலில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். மாமன், மைத்துனர் களால் தக்க நேரத்தில் உதவி கிடைக்கும். கணவன்–மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத் தில் சுபகாரியங்கள் நடைபெறு வதற்கான வாய்ப்புகள் உண்டு.

இருப்பினும், மனதில் ஏதோ ஒரு கவலையும் பயமும் இருந்து கொண்டே இருக்கும். தாய்வழி முன்னோர்களால் சில பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்நிய மனிதர்கள் - புதிய நபர்களால் சில பிரச்னைகள் உருவாகலாம்.

அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நன்மை யைத் தரும். இல்லையெனில், சட்டப் பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு, நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கவனம் தேவைப்படும் நாள்கள்: ஜூலை - 20, 25, 29

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்தில் ஒற்றுமையுடனும் கவனத்துடனும் கணவனும் மனைவியும் இணைந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. அந்த முடிவுகள் பெரும்பாலும் பிள்ளைகள் தொடர்பானவையாக இருக்கும். ஏனெனில் அவர்களால் சில பிரச்னைகளும் கவலைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது அவசியம்.

தற்சமயம் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உறுதுணை யாக இருப்பார். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இருப்பினும், கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. மாமன், மைத்துனர்களால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக் கும். மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கக்கூடும். சிலருக்கு பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டு.

மனமகிழ்ச்சிக்காக தேவையற்ற செலவுகளைச் செய்து, பின்னர் அவசியமான செலவுகளைச் சமாளிக்க சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எனவே, கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படு வதோடு, நாணயத்தையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பிள்ளைகளால் ஏற்படக்கூடிய செலவுகள் மற்றும் பிரச்னைகள் மனஅழுத்தத்தை உண்டாக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும் காலம் இது.

கவனம் தேவைப்படும் நாள்கள்: ஜூலை - 21, 30; ஆக.3

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலர் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். இவ்வளவு காலம் மனத் தடுமாற்றத்தில் இருந்து, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவர்களுக்கு இப்போது ஒரு புதிய வழி கிடைப்ப தற்கான சூழ்நிலைகள் உருவாகும்.

சிலருக்கு அந்த வாய்ப்பை அவர்களின் தந்தையே உருவாக்கிக் கொடுப்பார். அதேநேரம், புத்திர பாக்கியம் மற்றும் புத்திரர்களின் முன்னேற்றம் மேம்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலைகள் காணப் படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி லாபம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். கணவன்–மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். அவர்களின் தேவைகள் காலம் வந்து பூர்த்தி அடைவதால், மனதில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் ஒற்றுமை யும் மேலோங்கும். சிலருக்கு அந்நியப் பெண்கள் அல்லது அந்நிய நாட்டில் வாழ்பவர்களால் சில நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் சேருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும், சிலர் உல்லாசச் சுற்றுலா செல்வ தற்கான வாய்ப்பையும் பெறுவார் கள். உத்தியோகத்தில், நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைக்கும். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்த்து விடுங்கள். பணிகளைத் தேங்க விட வேண்டாம்.

கவனம் தேவைப்படும் நாள்: இல்லை

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கண் தொடர்பான தலைவலி மற்றும் மூளை நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு, அந்தப் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து உடல்நலம் மேம்படு வதற்கான வாய்ப்புகள் உண்டு. சிந்தனைகளில் தெளிவு ஏற்பட்டு, இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் நீங்கி, மனதில் உறுதியான மற்றும் தெளிவான நிலை உருவாகும்.

கணவன்–மனைவி உறவு சிறப்பாக அமையும். குடும்பத்தின் தேவைகளைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்வதால், குடும்பத்தில் மன அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மனைவி மற்றும் மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அத்தை வழி உறவினர் கள்... அதாவது தந்தையுடன் பிறந்த சகோதரிகள் மற்றும் அவர் களது குடும்பத்தினர் தொடர்பாக சிலருக்குச் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர் களுடன் பழகும்போது கவனத்துடன் இருப்பது நல்லது.

உடன்பிறந்தவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பேசும்போதும், பழகும்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தேவையற்ற வகையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, பல பிரச்னைகளிலிருந்து உங்களை பாதுகாக்க உதவும். குலதெய்வ வழிபாட்டை தவறவிட்டவர்கள், மீண்டும் அந்த வழிபாட்டை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஆலய தரிசனங்களும், புண்ணிய யாத்திரைகளும் அதிகரிகும் காலம் இது.

கவனம் தேவைப்படும் நாள்கள்:

ஜூலை - 26



from Vikatan Latest news https://ift.tt/v9JqIP1

Post a Comment

0 Comments