நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு மசோதா இயற்றி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 4 மாதங்கள் கழித்து தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். நீட் மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பியனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது. அதேபோல் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உள்ளது என்பதால் இந்த மசோதாவை திரும்ப அனுப்புகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள் அதில் கடுமையாக கொதித்து போய் உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் அறிவித்து உள்ளது. அதேபோல் ஆளும் திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவும் ஆளுநர் முடிவிற்கு எதிராக மீண்டும் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக தவிர அனைத்து முக்கிய கட்சிகளும் இந்த முடிவை எதிர்த்து இருக்கின்றன.
முதல்வர் ஸ்டாலினும் இதை முன்னிட்டு நேற்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். அதில், பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், 'ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?' என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன். இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவை அரசு எடுக்கும். வரும் 5ம் தேதி இதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்
இந்த ட்விட்டில் #StandForStateRights என்ற டேக்கை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தேசிய அளவில் டேக் ஒன்று டிரெண்டாகிக்கொண்டு இருக்கிறது. வெளியேறுங்கள் ரவி என்று பொருள்படும் வகையில் #GetOutRavi என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழர்கள் பலர் இதில் ட்வீட் செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் இது. சட்டசபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இயற்றப்பட்ட சட்டம் இது. அப்படி இருக்கும் ஒரு சட்டத்தை ஆளுநர் நிராகரிப்பது என்ன நியாயம். பின் மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்த எம்எல்ஏக்களுக்கு என்ன மதிப்பு.. பின்னர் ஏன் தேர்தல்களை நடத்த வேண்டும். ஆளுநர் உடனே இந்த சட்டத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் திரும்ப செல்ல வேண்டும், என்று நெட்டிசன்கள் இணையத்தில் ட்விட் செய்து வருகிறார்கள்.

0 Comments