தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோரம் மற்றும், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும், இன்றும், நாளையும், தென் கடலோரம், டெல்டா பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை, கடலூரில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு செல்லும் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையுடன் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments