காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்களின் குழு (IPCC) வெளியிட்டுள்ள அறிக்கையை பூவுலகின் நண்பர்கள் மொழிபெயர்த்து செய்தி வெளியிட்டுள்ளார்கள். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அதிலிருந்து தகவமைத்துக் கொள்ளும் வழிகளையும் கூறும் அந்த அறிக்கையின் சாராம்சம் இதோ,
1. உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிப்படையும் நிலையில் வாழ்கின்றனர்.
2. தீவிர காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் புவி வெப்பநிலை உயர்வால் மீள முடியாத பாதிப்புகள் ஏற்பட்டு இயற்கை மற்றும் மனித அமைப்புகள் இனிமேல் தகவமைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
3. இன்னும் சில ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும் பட்சத்தில் தவிர்க்க முடியாத வேகத்தில் தீவிர காலநிலை பேரிடர்களும், மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
4. புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த முழுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏற்படப்போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது.
5. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் நாளுக்கு நாள் சிக்கலானதாகவும் கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும்.
6. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் காலநிலை மாற்றம் அல்லாத பிரச்னைகளும் சேர்ந்தே நிகழும்போது சமாளிக்க முடியாத பிரச்சனையாக மாறக்கூடும். அத்தகைய சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வேறு சில புதிய பிரச்சனைகளை உருவாக்கும்.
7. வரும் பத்தாண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை விட அதிகரித்தால் பல மனித மற்றும் சூழல் அமைப்புகள், 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உள்ளாக வெப்பநிலை இருக்கும்போது ஏற்படும் பாதிப்புகளைவிட கூடுதல் பாதிப்புகளையும் அபாயங்களையும் சந்திக்கும்.
மேலும், பூவுலகின் நண்பர்கள் இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி "அடுத்த சில ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் வீணாய்ப் போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்." என்று எச்சரிக்கின்றனர். பேரிடர்களும் பெருந்தொற்றுமே இயல்பு நிலையாக மாறிவிடும் அபாயத்தை யார் தான் விரும்புவார்கள்.
from Latest News https://ift.tt/JeU1TyL
0 Comments