சென்னை திருவெற்றியூர் காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தங்க செல்வம் (60). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த இருவரும் முகவரியைக் கேட்டு விசாரித்துள்ளார். தங்க செல்வத்திடம், நீங்களே வந்து வழி காட்டும்படியும், போகும் வழியில் தங்களை இறக்கி விடுவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார்.
அவரும் அந்த வழியில் தான் வீட்டுக்குப் போகவேண்டும் என்பதினால் ஆட்டோவில் ஏறிச் சென்றிருக்கிறார். அப்போது, ஜீவன்லால் நகர் அருகே தங்கச்செல்வத்தை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டுக்கு நடந்து போகும்போது தான் தன்னுடைய செல்போன் மாயானது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தங்கச்செல்வம் செல்போன் காணாமல் போனது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இந்த விசாரணையில், தங்க செல்வத்திடம் செல்போன் பறித்தது, தண்டையார்பேட்டையைப் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (23) என்பதும், திருவொற்றியூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (28) என்பதும் தெரியவந்தது. இவர்களைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். வடசென்னையின் பல்வேறு பகுதிகளால் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களின் முக்கிய குறியே வயதானவர்கள் தான்.
இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து வயதானவர்களிடம் முகவரி கேட்பது போல ஆட்டோவில் ஏற்றி அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவார்கள். அவர்கள் அசந்த நேரத்தில், பின்னல் உட்கார்ந்திருப்பவர் செல்போனைத் திருடிவிடுவார். செல்போனைத் திருடியவுடன் அவர்களை ஆட்டோவிலிருந்து இறக்கிவிட்டு விட்டு அந்த இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து மூன்று செல்போன் மற்றும் ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
from Latest News https://ift.tt/GeJ1jVa
0 Comments