உக்ரைன், ரஷ்யாவிலிருந்து குறைந்த சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி; இந்த வாய்ப்பை பயன்படுத்துமா இந்தியா?

இந்தியா 2.5 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 70% உக்ரைனிலிருந்தும், 20% ரஷ்யாவிலிருந்தும், மீதம் அர்ஜென்டினா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் வாங்குகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தற்போது போர் நடந்து வருவதால், இந்தியாவின் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியா சூரியகாந்தி சாகுபடியில் ஈடுபட்டு, ஏற்றுமதி செய்ய பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியகாந்தி

பஞ்சாப் போன்ற மாநிலங்களின் சாகுபடிக்கு சூரியகாந்தி பொருத்தமான பயிர் என்றே சொல்லலாம். ஏனெனில், இது ஒரு 100 நாள் பயிர் மற்றும் ஆண்டு முழுவதும் இதை விளைவிக்கலாம். குறைவான அளவு தண்ணீரே இவை வளர போதுமானது. அதிக மகசூல் இருப்பதால், குறைந்த நிலப்பரப்பிலேயே அதிகமாக விளைச்சல் எடுக்க முடியும்.

சூரியகாந்தி விதைகளிலிருந்து மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் 2.40 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்ட சுமார் 60,000 டன் சூரியகாந்தி எண்ணெய் தேக்க நிலையில் உள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன், பஞ்சாப் மட்டும் கிட்டத்தட்ட 54,000 டன் சூரியகாந்தி எண்ணெயை உற்பத்தி செய்துள்ளது.

Oil (Representational image)

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் நுகர்வானது, 25 மில்லியன் டன்கள் (250 லட்சம் டன்கள்), இதில் 14.46 மில்லியன் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. இவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட சூரிய காந்தி எண்ணெய் மட்டும் 2.5 மில்லியன் டன்கள், அதாவது மொத்த எண்ணெய் இறக்குமதியில் இது 17%.

பிற நாடுகளில் இருந்து இறக்குமதிக்காக சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு, நம்முடைய நாட்டில் சூரியகாந்தி உற்பத்தியை உயிர்ப்பிக்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



from Latest News https://ift.tt/H7Cv2Jb

Post a Comment

0 Comments