சீட் வாங்கவே கஷ்டப்பட்டவர் கோவை மேயர் ஆனது எப்படி?! - திருப்புமுனையான அந்த `அழைப்பு’

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் தன் மனைவி லக்குமி இளஞ்செல்வியை முன்னிறுத்தினார். மறுபுறம் புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தனது மகள் நிவேதாவை முன்னிறுத்தினார். இருவரும் தங்களது சாதியையும் கூடுதல் பலமாக முன்னிறுத்தினர். ஆனால், தேர்தல் உள்ளடி வேலை காரணமாக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீது செந்தில் பாலாஜி அப்செட்டில் இருந்தார்.

கோவை மாநகராட்சி

எனவே, பெரிய அளவுக்கு சர்ச்சையில் சிக்காத ஒருவரை செந்தில் பாலாஜி தேடினார். அதேநேரத்தில் தனக்கு நிகராக யாரும் வந்துவிடக்கூடாது என்பதால் பிரமாண்டங்களை உதறித் தள்ளி எளிமையானவரை தேடினார். அப்போது கிடைத்தவர் தான் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா.

இதுகுறித்து தி.மு.கவினர் கூறுகையில், “பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். கணவர் மணியகாரம்பாளையம் பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். கல்பனா சாதாரண அடிப்படை உறுப்பினர். தங்களுக்கு ரூ.73 லட்சம் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கூறியுள்ளார். ஆனாலும், வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். மிகவும் எளிமையானவர் என்பதால், சீட் வாங்குவதற்கே படாதபாடுபட்டுள்ளார். கல்பனா போட்டியிட சக உடன்பிறப்புகள் எதிர்ப்புகூட தெரிவித்தனர்.

கல்பனா

ஒருவழியாக சீட் வாங்கி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு தான் முயற்சித்து வந்தார் கல்பனா. கோவை மேயர் பதவிக்காக சுமார் 40-க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் எல்லாம், “பார்த்துக்கலாம்.. தலைவர் தான் முடிவு பண்ணுவார்…” என்பதைத்தவிர செந்தில் பாலாஜி வேறு ஏதும் பேசவில்லை.

கவுன்சிலராக பதவி ஏற்பதற்கு சில நாள்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து கல்பனாவுக்கு அவசரமாக, “சென்னைக்கு வாருங்கள்.” என்று ஓர் அழைப்பு வந்தது. அதுதான் அவரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றிவுடன் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க பேருந்தில் சென்றவர், அழைப்பின் அவசரம் காரணமாக இந்தமுறை விமானத்தில் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்தார்.

கல்பனா

யாரிடமும் அதிகம் பேசாத செந்தில் பாலாஜி மற்றும் அவரின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டோர் சுமார் அரை மணி நேரம் கல்பனா மற்றும் அவர் கணவர் ஆனந்திடம் பேசியுள்ளனர். அப்போதே மூத்த நிர்வாகிகள் புகைய தொடங்கிவிட்டனர்.

10-ம் வகுப்பு தான் படித்தவர் என்றாலும், தங்களுக்கு விசுவாசமாக இருப்பார் என்பதால் செந்தில் பாலாஜி தரப்பு கல்பனாவை டிக் அடித்துள்ளனர். கல்பனாவும், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை முன்னாள் மேயராக இருந்த கணபதி ராஜ்குமார் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜி கல்பனா

தலைமை அறிவிக்கும் முன்புவரை கல்பனாவை உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் பலருக்கும் தெரியாது. ஒருவகையில் கல்பனாவை டிக் அடித்தது, முக்கிய நிர்வாகிகளுக்கு அப்செட்டாக இருந்தாலும் எளிய உறுப்பினரை மேயராக்கும் முயற்சி பரவலாக வரவேற்பைப் பெற்று வருகிறது.” என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/tPnFrO7

Post a Comment

0 Comments