``புதினைக் கொல்வதே போர் பிரச்னைக்கு ஒரே தீர்வு!" - அமெரிக்க எம்.பி காட்டம்

ரஷ்யா உக்ரைன் இடையே நிலவும் போர் சூழலால் உக்ரைன் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினை யாராவது ஒருவர் கொலை செய்ய வேண்டும் என அமெரிக்காவின் மூத்த செனட் சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் என்பவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ரஷ்ய ராணுவத்தில் யாரேனும் ஒரு ப்ரூடஸ் இருக்கிறார்களா? அல்லது கர்னல் ஸ்டாஃபென்பெர்க் இருக்கிறார்களா? ரஷ்யாவில் இருக்கும் புதினை இங்கிருந்து வெளியேற்றினால் மட்டுமே இந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும்.

அமெரிக்க தலைவர் லிண்ட்சே கிரஹாமன்ட்வீட்

மேலும், இதைச் செய்தால் உங்கள் நாட்டுக்கும், இந்த உலகத்துக்கும் நீங்கள் செய்யும் சிறந்த சேவையாகும். இதைச் செய்ய ரஷ்ய மக்களால் மட்டுமே முடியும். சொல்வது எளிது, செய்வது கடினம்" எனப் பதிவிட்டுள்ளார்.

1944-ல் ஹிட்லரைக் கொல்ல முயன்றவர் தான் ஜெர்மன் இராணுவ அதிகாரி கர்னல் ஸ்டாஃபென்பெர்க். இந்த ரோமானிய ஜெனரல் ஜூலியஸ் சீசரை கொலை செய்தவர் ப்ரூடஸ் என்பது குறிப்பிடதக்கது.



from Latest News https://ift.tt/HaWqtiZ

Post a Comment

0 Comments