திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கு! - ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்

உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டுப் போடுவதாக புகார் எழுந்தது. அந்தச் சமயத்தில், தி.மு.க பிரமுகர் நரேஷ் என்பவரை பிடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர், அவர் கள்ள ஓட்டுப் போடுவதாகக் குற்றம்சாட்டினார். அந்தத் தொண்டரின் சட்டையைக் கழற்றவைத்து, அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீஸிடமும் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

அமைச்சர் ஜெயக்குமார்

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தற்போது ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால் ஜெயக்குமாருக்கு கடுமையான நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



from Latest News https://ift.tt/5p9mGtz

Post a Comment

0 Comments