ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறவேண்டும்! - நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழ்நாட்டில் நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்தார்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுநர் அந்த மசோதாவைத் திரும்பத் தமிழக அரசுக்கே அனுப்பினார். இது தமிழக அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சிறப்புச் சட்டப்பேரவை கூட்டப்பட்டு இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்து நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம்

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம், ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க- நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி-யை பதவியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தி.மு.க பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.



from Latest News https://ift.tt/b49V25I

Post a Comment

0 Comments