மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சில குற்றவாளிகள் தம்முடைய பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியதையடுத்து, சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேரை ஒடிசா போலீஸ் கைது செய்துள்ளது.
இது தொடர்பாக ஓம் பிர்லா, ``சில குற்றவாளிகள் என் பெயரில், என் புகைப்படத்துடன் கூடிய போலி வாட்ஸ்அப் கணக்கை உருவாக்கி, எம்.பி-க்கள் மற்றும் பிறருக்கு 7862092008, 9480918183 9439073870 ஆகிய எண்களிலிருந்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் மற்றும் பிற எண்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை புறக்கணித்துவிட்டு, இதுகுறித்து எனது அலுவலகத்திற்குத் தெரிவிக்கவும்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஒடிசா போலீஸாரால், இதில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 3 பேர் சைபர் க்ரைம் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள், `கைதுசெய்யப்பட்ட மூன்றுபேரும், ஏற்கெனவே ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம் கார்டுகளை, ஒரு கும்பலுக்கு விற்றுவிட்டு, பொதுத்தளத்தில் இருக்கக்கூடிய ஓம் பிர்லாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அதிலிருந்து போலி வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டிருந்தாக' கூறுகின்றன.
இதேபோல் கடந்த மாதம், துணை குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடுவைப் போல் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து, சில வி.ஐ.பி-க்கள் உட்பட பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக, அப்போதே உள்துறை அமைச்சகத்துக்கு, வெங்கைய நாயுடு அலுவலகத்தில் இருந்து இதுகுறித்து பேசி எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியிருந்தது.
from Latest News https://ift.tt/4L5TKwc
0 Comments