மதுரை: காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி; சாதிக்கும் தெற்கு ரயில்வே!

காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பல கோடி ரூபாய்க்கு மின்சாரச் செலவைக் குறைத்து தெற்கு ரயில்வே சாதனை செய்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை ரயில்வே கோட்ட ஊடகத் தொடர்பாளர், "சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைத் தெற்கு ரயில்வே எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரைக் கோட்டத்தில் கயத்தாறு அருகில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்துவருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி

10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்தக் காற்றாலை அமைக்க ரூபாய் 72 கோடி செலவிடப்பட்டது. இதன் மூலம் 2021 - 22-ம் ஆண்டில் 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 15.412 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரச் செலவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காற்றாலை மூலம் இதுவரை 80.095 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ரூபாய் 48.057 கோடி அளவுக்கு மின்சாரச் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுரைக் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அலுவலகப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

தெற்கு ரயில்வேயின் காற்றாலை

மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னை டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு 100 சதவிகித பகல் நேர மின்சார தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/FguvQ51

Post a Comment

0 Comments