மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவிலிருந்து நீக்கிய உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து 40 எம்.எல்.ஏ.க்களை பிரித்து, பாஜக-வின் துணையோடு முதல்வராகி இருக்கிறார். இதனால் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், சிவசேனா பக்‌ஷா பிரமுக் என்ற முறையில் எனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி ஏக்நாத் ஷிண்டேயை கட்சியின் அமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளார். இதற்கு பதில் தெரிவித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, ``நான் தான் சிவசேனா தலைவர். உத்தவ் தாக்கரே அணி சிறுபான்மையாகிவிட்டது. எனவே அவர் தன்னை கட்சி தலைவர் என்று அழைக்க முடியாது. டெக்னிக்கலாக மட்டுமே இப்போது உத்தவ் தாக்கரே தலைவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ்

அதோடு ஏக்நாத் ஷிண்டே தன்னை பால் தாக்கரேயின் அரசியல் வாரிசு என்று அறிவித்துக்கொண்டதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் அதனை புரொபைல் படமாக வைத்தார். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிலும் தாங்களே உண்மையான சிவசேனா என்று ஏக்நாத் ஷிண்டே அணி குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே சிவசேனா எம்.பி.க்களில் ஒரு பிரிவினர் ஏக்நாத் ஷிண்டேயுடன் இணைந்து செயல்படும்படி உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியிருந்தார். இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்கு உத்தவ் தாக்கரே இன்னும் பதிலளிக்கவில்லை. மேலும் சிவசேனா எம்.பி.க்கள் 12 பேர் அணி மாற தயாராக இருப்பதாக பாஜக மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் சிவசேனாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



from Latest News https://ift.tt/2TWN51M

Post a Comment

0 Comments