சென்னை உயர் நீதிமன்றத்தில் விவாகரத்தான தன் மனைவியிடம் வளரும் குழந்தையைச் சென்று பார்க்க உரிமைக் கோரி, ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீதான விசாரணையின்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ``விவாகரத்தான பின்பு சில மனைவிகள் குழந்தைகள் முன் தவறாக நடந்து கொள்வதாகவும், சண்டையிடுவதாகவும் அறிய முடிகிறது. விவாகரத்தான மனைவி கணவனையோ, அல்லது கணவன் மனைவியையோ சம மரியாதையோடு, வெறுப்பை விழுங்கி அன்போடுதான் நடத்த வேண்டும் என நான் கூறமாட்டேன்.
ஆனால், மனித நேயத்துடன் நடத்தலாமே.... எது மனிதநேயம்? தங்கள் குழந்தைகள் முன் ஒருவர்மீது ஒருவர் அன்பாக நடந்துக்கொள்ளவது தானே... அல்லது குறைந்தபட்சம் ஒரு விருந்தினராக நடத்தலாமே... ஏனெனில் நமது பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில், ஒரு விருந்தினரை 'அதிதி தேவோ பவ (விருந்தினர் கடவுள்)' எனக் கருதுகிறோம். எனவே, குழந்தையைக் காண பிரிந்த கணவர் வரும்போதெல்லாம் விருந்தோம்பல் செய்து, சிற்றுண்டிகளை வழங்கி, இரவு உணவை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட்டு குழந்தையை மகிழ்ச்சியாக உணரும்படி செய்யுங்கள்" எனக் கூறினார்.
from Latest News https://ift.tt/rayEeL7
0 Comments