``மோடி கருத்து தெரிவிக்காத வரை உலக நாடுகள் எந்த முடிவையும் எடுப்பதில்லை" - அமித் ஷா புகழாரம்

2014, 2019 லோக் சபா தேர்தலைப் போலவே 2024 தேர்தலையும் மோடி தலைமையில் பா.ஜ.க கூட்டணி சந்திக்கும் எனக் கூறியிருந்த அமித் ஷா, ``மோடி கருத்து தெரிவிக்காத வரை உலகம் எந்த முடிவையும் எடுப்பதில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசியக்கொடியின் படத்தை வைக்குமாறு அமித் ஷா கோரிக்கை விடுத்திருந்தார்.

அமித் ஷா

இந்த நிலையில், தேசியக் கொடியை உருவாக்கிய பிங்கலி வெங்கய்யாவை கெளரவிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற 'திரங்கா உத்சவ்' நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, `` 2014, 2022-க்கு இடைபட்ட காலத்தில் பிரதமர் மோடி, உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறார். இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறது.

மோடி

பிரதமர் மோடி இன்று தனது கருத்தை தெரிவிக்காத வரையில், உலகம் எந்தவொரு விஷயத்திலும் எந்த முடிவையும் எடுப்பதில்லை. இந்தியா இப்படி கெளரவிக்கப்படுவதைக் காணப் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர். அத்தகைய ஓர் புதிய இந்தியா, மோடியின் தலைமையில் கட்டமைக்கப்படுகிறது. அதுவும் மோடியின் கனவின்படி கட்டமைக்கப்படுகிறது" எனக் கூறி இருக்கிறார்.



from Latest News https://ift.tt/81XtmeU

Post a Comment

0 Comments