காதல் உறவுகள் முறியும்போது சிலர் விபரீதமான முடிவுகளை எடுப்பதுண்டு. ஒரு சிலர் தங்கள் முன்னாள் பார்ட்னரை பழிவாங்கும் வேலையிலும் ஈடுபடுவதுண்டு. அது போன்ற ஒரு சம்பவம்தான் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் தென் பகுதியில் வசிப்பவர் சகுந்தலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 42 வயதாகும் இந்தப் பெண் அங்குள்ள ஜிம் ஒன்றுக்குச் சென்றபோது அங்கு வந்த திருமணமான ஆடவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் அது அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாக நட்பு தொடர்ந்தது. இக்காலக்கட்டத்தில் சகுந்தாவிற்கு அந்த நபர் விலை உயர்ந்த பரிசுப்பொருள்களை கொடுத்தார்.
ஆனால் நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகுந்தலா அந்த நபரை, ``உங்களுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்யவேண்டும்" என்று நிர்ப்பந்தம் செய்தார். ஆனால் அதற்கு அவர் ஆண் நண்பர் சம்மதிக்கவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஆபாச படங்களைக் காட்டி சகுந்தலா மிரட்ட ஆரம்பித்தார். எனவே சகுந்தலாவுடனான தொடர்பை அந்த நபர் துண்டிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் முடியவில்லை. சகுந்தலா ஒரு முறை தன் ஆண் நண்பர் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், ஆண் நண்பரை பழிவாங்க அவரின் ஆபாசப் படத்தை அவரின் 14 வயது மகள் படிக்கும் பள்ளியின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்தார் அந்தப் பெண். இதனால் வேறு வழியில்லாமல் ஆண் நண்பர் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சகுந்தலா முன்ஜாமீன் கேட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி, ``மனுதாரரும், அவருடைய பார்ட்னரும் வாழ்நாள் முழுக்க ஒருவருக்கொருவர் போராடிக்கொண்டிருக்கலாம். ஆனால் மனுதாரர் தன்னுடைய ஆண் நண்பரின் குடும்பம் அல்லது அவரின் மகளின் அமைதியை சீர்குலைக்க எந்த அதிகாரமும் கிடையாது. குற்றவாளியின் இந்தச் செயலால் மாணவியின் மதிப்பு, எதிர்காலம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறி அந்தப் பெண்ணின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
from Latest News https://ift.tt/Ovgqdkx
0 Comments