சாரு நிவேதிதா: `சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி' - எழுத்தாளர் ஜெயமோகன்

நவீன தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழாவில் இதுவரை எழுத்தாளர் ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், வண்ணதாசன், விக்கிரமாதித்தன என பல ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது 2022 ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விருது தொகையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இவ்விழா வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

சாரு நிவேதிதா

இது பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட எழுத்தாளர் ஜெயமோகன், "நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும். இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் வழியாக பிறழ்வெழுத்தின் வகைமைகளையும் அதன் ஆசிரியர்களையும் தமிழில் அறிமுகம் செய்தவர். இசையிலும் பிறழ்வெழுத்துக்கு இணையான சமன்குலைக்கும் வகைமாதிரிகளை அறிமுகம் செய்தவர். தன்வரலாறும் புனைவும் கலந்த எழுத்து அவருடையது. தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்து வகையிலும் புதியது" என்று குறிப்பிட்டுள்ளார்.



from Latest News https://ift.tt/WwfjdcS

Post a Comment

0 Comments