``அரை மணி நேரம் போதும்; ஆனால் சட்டத்தை கையில் எடுக்க விருப்பமில்லை!"- அண்ணாமலை

கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவையில் சுமார் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களிலும் போலீஸார் அலர்ட்டாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தேசத்துக்கு எதிராக பேசக்கூடிய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரை மணி நேரம் போதும். பாரதிய ஜனதா கட்சி அமைதியே விரும்பக் கூடிய கட்சி. தமிழ்நாடு அரசின் செயல்பாடு, காவல்துறையின் செயல்பாடுகளை அடுத்த இரண்டு நாள்களுக்கு பார்ப்போம். அதன் பிறகு எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.

ஸ்டாலின்

பாஜக-வினரை கைதுசெய்வதில் இவர்கள் ஆர்வம்காட்டும் நிலையில், பாஜக நண்பர்கள், சகோதரர்கள்மீது நடத்தப்படக்கூடிய தாக்குதல்களில் தொடர்புடையவர்களை கைதுசெய்வதில் ஏன் இந்த மெத்தனப்போக்கு எனத் தெரியவில்லை. சட்டத்தை எங்களுடைய கையில் எடுப்பதற்கு எங்களுக்கு விருப்பம் கிடையாது. பாஜக அமைதியின் வழியில் செல்ல வேண்டும் என நினைக்கிறது. தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடந்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.



from Latest News https://ift.tt/crmBRQW

Post a Comment

0 Comments